×
 

மகா சிவராத்திரி விழா கோலாகல கொண்டாட்டம்! இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானை வழிபட்ட பக்தர்கள்...

மகா சிவராத்திரியை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இரவு முழுவதும் கண் விழித்து சிவபெருமானை பக்தர்கள் வழிபட்டனர்.

மகாசிவராத்திரியை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. 

திருமாலும் விஷ்ணுவும் சிவபெருமானின் அடிமுடி காணாது திகைத்துப் போய் நிற்கும்போது லிங்கோத்பவராக சிவபெருமான் காட்சி அளித்தார். அதுவே சிவராத்திரியாக கொண்டாடப்பட்ட வருகிறது. இந்த நிலையில் பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. 

இதையும் படிங்க: ஆந்திராவில் பக்தர்களை தாக்கிய யானை கூட்டம்.. உடல் நசுங்கி பலியான பக்தர்கள்.. நிவாரணம் அறிவித்தார் பவன் கல்யாண்..

மகா சிவராத்திரியை ஒட்டி அனைத்து சிவாலயங்களிலும் நான்கு கால பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இரவு முழுவதும் கண் விழித்து காத்திருந்து பக்தர்கள் வழிபாடும் மேற்கொண்டனர். 

மகா சிவராத்திரியை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா..! போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கோவை மாநகரம்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share