×
 

மாசிமக சிறப்பு வழிபாடு.. சென்னை கடற்கரைகளில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்..

மாசி மகத்தை முன்னிட்டு  மெரினா கடற்கரையில் பல்வேறு ஆலயங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட உற்சவமூர்த்தி களின் தீர்த்தவாரி பக்தர்களின் கோஷங்களுக்கு இடையே வெகு விமரிசையாக நடைபெற்றது.

மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திரம் மாசி மகம் என்று புராணங்களில் கூறப்படுகிறது. அனைத்து மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சிவன், விஷ்ணு, முருகன் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் உகந்த நாளாக மாசி மகம் கருதப்படுகிறது. பிறவைப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக் கடலில் இருக்கும் ஆன்மா இறைவனது அறக்கடலை வேண்டும் நாளே மாசி மகத்தின் சிறப்பம்சமாகும். இந்த நாளில் சிவன் பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் இருந்து உற்சவர்களுக்கு நீர் நிலைகளில் தீர்த்தமாடுவதே இந்நாளின் முக்கிய அம்சமாகவும் பார்க்கப்படுகிறது.

இதனால் என்ன நாளை கடலாடும் நாள் என்றும் தீர்த்தமாடும் நாள் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு புண்ணிய இடங்களில் தீர்த்தமாட இயலாதவர்கள் வீட்டிலிருந்தே விரதம் இருந்து சிவன் மற்றும் பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்கின்றனர்.

இதையும் படிங்க: தஞ்சையில் களைகட்டிய மாசிமக தேரோட்டம்.. கோஷங்கள் எழுப்பி பக்தர்கள் வழிபாடு!

இந்த நிலையில் தான் சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர், காரனேஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி உள்ளிட்ட ஆலயங்களில் இருந்து உற்சவமூர்த்திகள் மெரினா கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று  கடலில் புனித நீராடி உற்சவ மூர்த்திகளை வழிபட்டனர்.

மேலும் பக்தர்கள் அவர்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் காலை முதலே முனைப்பு காட்டி வருகின்றனர். இந்த நாளில் புனித நீராடி உற்சவ மூலவரை வழிபட்டால் காசியில் புனித நீராடி காசி விஸ்வநாதரை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்றும் சகல தோஷங்களும் ரோகங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். இதனால் ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி, அவர்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

இதையும் படிங்க: தஞ்சையில் களைகட்டிய மாசிமக தேரோட்டம்.. கோஷங்கள் எழுப்பி பக்தர்கள் வழிபாடு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share