அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு பால்வளத்துறை ஒதுக்கீடு..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது..!
தமிழக அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுள்ள மனோ தங்கராஜ்க்கு பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில், அமைச்சரவையில் 6வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு, மின்சாரத்துறையும், அமைச்சர் முத்துச்சாமிக்கு மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையும், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வனத்துறையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள மனோ தங்கராஜ் இன்று பதவியேற்ற நிலையில், அவருக்கு இலாகா குறித்து அறிவிக்கப்படாமல் இருந்தது.
இதையும் படிங்க: மீண்டும் அமைச்சரானார் மனோ தங்கராஜ்..! முதலமைச்சர் முன்னிலையில் ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம்..!
இந்நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜூக்கு பால்வளத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பால்வளத் துறையை அவர் கவனித்துக் கொண்டு இருந்த நிலையில் மீண்டும் அதே இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐ.பெரியசாமிக்கு செக்..! அடுத்த விக்கெட்டா? அலறும் திமுக..!