×
 

திருக்குறள் சொல்லி பட்ஜெட் அறிவிப்பு... உழவுக்கு உயிர் கொடுக்கும் திட்டங்கள்!!

சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தொடங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திருக்குறளை கூறி தனது உரையை தொடங்கினார். 

2025-2026ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று காலை 9.30 மணிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து வேளாண்மை துறை சார்ந்த பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இன்று காலை 9.30 மணியளவில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண்மை துறை சார்ந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடக்கினார்.

பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கிய அமைச்சர் “பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்  அலகுடை நீழ லவர்” என்ற திருக்குறளை வாசித்தார். இதன் பொருள் பல்வேறு அரசுகளை தனது குடை நிகழலின் கீழ் கொண்டு வரும் திறமை பெற்றவர்கள் உழவர்கள் என்று திருவள்ளுவர் புகழ்ந்துரைத்துள்ளார்.  மேலும், பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக், குடிபுறம் தருகுவை யாயின், நின் அடிபறந்த தருகுவர் அடங்கா தோரே” என்ற புறநானூறு உரையை எடுத்துரைத்தார்.

இதையும் படிங்க: டெல்டாவுக்கு ரூ.58 கோடி... வேளாண் பட்ஜெட் தாக்கல்!!

இதற்கு காளை மாடுகளை போற்றி உழவு செய்யும் விவசாயிகளை நீ போற்றினால் அடங்காத உன் பகைவர் உன்னிடம் அடிபணிவர் என்று மன்னனுக்கு புலவர் கூறும் அறிவுரை. இதை பேரவையில் பாடிய அமைச்சர் உழவர்களை எடுத்துரைத்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலை ஒட்டி மெரினா கடற்கரைக்கு சென்ற அமைச்சர் அங்கு அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில்  நிதி நிலை அறிக்கையை வைத்து மரியாதை  செலுத்தினார்.  

பின்னர் பட்ஜெட் உரையில் ஆயிரம் முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும், 3லட்சம் ஏக்கர் பரப்பரளவில் கோடை உழவு திட்டத்துக்கு ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்யப்படும், டெல்டா அல்லாத பயிர் சாகுபடியை அதிகரிக்க ரூ.102 கோடி ஒதுக்கீடி, மக்காச்சோளம் உற்பத்தி மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.40.27 கோடி ஒதுக்கீடு, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.12 கோடியில் திட்டம் வேளாண் உற்பத்தி மற்றும் புதிய தொழில் நுட்பத்தை கண்டறியும் விவசாயிகளுக்கு பரிசுகள், உழவர்களை தேடி ஆலோசனை வழங்க வேளாண்மை திட்டம் என பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

இதையும் படிங்க: தமிழக சட்டப்பேரவையில் இனி விவாதங்கள் தான்.. பதில் அளிக்கப்போகும் அமைச்சர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share