பொய் சொல்வது யார்..? அமித் ஷாவா? பழனிசாமியா? விரைவில் தெரியவரும் - ரகுபதி..!
மக்கள் பிரச்னைக்கா அமித்சாவை பார்த்ததாக பழனிசாமி சொல்கிறார். விரைவில் தேஜ கூட்டணி அமையும் என அமித்சா சொல்கிறார். இருவரில் யார் பொய் சொல்கிறார்கள் என விரைவில் தெரியவரும் என அமைச்சர் ரகுபதி சொன்னார்.
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ரோஜா இல்லம் என்ற விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: தென் மாநிலங்களில் தொகுதி மறு சீரமைப்பால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்று கூறும் உள்துறை அமைச்சர் அமித்ஷா வடமாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை கூடாது என்று உறுதிமொழி தர தயாரா? அங்கு தொகுதிகள் நிச்சயமாக கூடும் என்ற பயத்தில் தான் இந்த நடவடிக்கையை எடுத்து வருகின்றோம். குடும்ப கட்டுப்பாடு அமல்படுத்தியதால் எங்களுக்கு தண்டனை தராதீர்கள் என்றுதான் கூறுகின்றோம்.
மக்கள் தொகை கணக்கெடுங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்கள் தொகுதி மறு சீரமைப்பை செய்யுங்கள் அதைஎல்லாம் எங்களுக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது. அதே நேரத்தில் 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையில்லையே தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டும். மற்ற மாநிலங்களிலும் குடும்ப கட்டுப்பாட்டை முழுமையாக அமல்படுத்துங்கள் மக்கள் தொகையை குறையுங்கள். தமிழ்நாடு நாம் இருவர் நமக்கு இருவர் நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று சொன்னது அதேபோல் மற்ற மாநிலத்திலும் சொல்ல வையுங்கள்.
இதையும் படிங்க: நீட் மரணங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா..? முதலமைச்சருக்கு இபிஎஸ் கேள்வி..!
உள்துறை அமைச்சர் அமித்ஷா போதை பொருளை பற்றி பேசுகிறார். நாடு முழுவதும் கடந்த ஐந்தாண்டுகளில் துறைமுகங்கள் வழியாக கடத்தப்பட்ட போதை பொருட்கள் 11311 கோடி ரூபாய். குஜராத்தில் மட்டும் 7350 கோடி ரூபாய் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2118 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை பொருள் அதிகம் உள்ள 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு கிடையாது. தமிழ்நாட்டிற்கு எந்தவித அவசியமும் கிடையாது. போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக ராஜஸ்தானில் இருக்கிறது அதுவும் பாஜக ஆளும் மாநிலம் தான்.
எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்ல, செங்கோட்டையனும் தான் அமித்ஷாவை சந்தித்து வந்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு பிரதமர் மோடியையோ உள்துறை அமைச்சர் அமித்ஷாவையோ சென்று பார்த்து தொகுதி மறு சிறமைப்பில் தமிழ்நாடு பாதிக்கப்படக்கூடாது.
மக்கள் தொகையை கட்டுப்படுத்திய எந்த மாநிலமும் பாதிக்க கூடாது என்பதை வலியுறுத்துவார். தமிழ்நாட்டின் நலனுக்காக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக எடப்பாடி பழனிச்சாமி கூறினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுக பாஜக கூட்டணி விரைவில் முடிவாகும் என்று கூறியுள்ளார். இதில் யார் பொய் சொல்கிறார்கள் என்பது விரைவில் தெரியும்.
100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு இருந்தால் அவர்கள் ஒரு கமிஷன் அமைத்து பார்த்துக் கொள்ளட்டும். எல்லா மாநிலத்திற்கும் 100 நாள் வேலை கொடுக்கிறார்கள். அதேபோல் தமிழ்நாட்டிற்கும் கொடுக்கட்டும். இந்தியாவிலேயே நூறு நாள் வேலைத்திட்டத்தை மிகச் சிறப்பாக செய்த மாநிலம் தமிழ்நாடு.
அதற்காக பாராட்டு பரிசுகளையும் நான் பெற்றுள்ளோம். வேலை பார்த்த ஐந்து மாத ஊதியத்தை அனாவசியமாக வைத்துக் கொள்ளாதீர்கள் அதை தாருங்கள் என்று தான் நாங்கள் கேட்கிறோம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சொன்னார்.
இதையும் படிங்க: குடும்ப பிரச்னையால் காவலர் கொலை.. அன்று அவர் பணிக்கே வரவில்லை.. அமைச்சர் ரகுபதி விளக்கம்..!