×
 

2026ல் திராவிட மாடல் 2.0..! காவல்துறைக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்..!

சட்டப்பேரவையில் காவல்துறைக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் உரை நிகழ்த்திய போது, அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.

காவல்துறைக்கான புதிய அறிவிப்புகள் வெளியிட்டு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது; தமிழகத்தை குற்றங்கள், போதை புழக்கம், பாலியல் குற்றங்கள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும். ஆண்டு தோறும் செப்டம்பர் ஆறாம் தேதி காவலர் நாள் கொண்டாடப்படும். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளிலும் காவலர்கள் பரிசோதனை செய்து கொள்ள வழிவகை. காவலர் நாள் கொண்டாடப்படும் நேரத்தில் சிறந்த காவலர்களுக்கு பதக்கம் வழங்கப்படும்.

ஆதி குடிகளை இழிவுபடுத்தும் காலனி என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படும். குடியிருப்புகளை சுற்றி சந்தேகம் நடமாட்டம் இருந்தால் போலீசுக்கு தகவல் கூறுங்கள். பொதுப் புழக்கத்திலிருந்து காலணி என்ற சொல் நீக்கப்படும். எங்கோ நடக்கும் ஒன்றுக் இரண்டு தவறுகளைப் பிடித்துக் கொண்டு குற்றச்சாட்டுகளை கூறுவது ஏற்க முடியாது.

 தமிழ்நாட்டின் அமைதிக்கு காவல்துறை தான் காரணம்., அவர்களுக்கு நாம் நன்றி கடன் பட்டுள்ளோம். எதிர்கட்சி தலைவர் கூறிய அனைத்து விவகாரங்களிலும் உரிய தீர்வு எடுக்கப்படும். அனைத்து காவல் நிலையங்களையும் சிசிடிவிகள் பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியை விட ஆயிரம் மடங்கு சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகிறோம். நீலகிரி மாவட்டம் உதகையில் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு கட்டப்படும். சார்பு ஆய்வாளர் தலைமையிலான 250 காவல் நிலையங்கள் ஆய்வாளர் தலைமையிலான காவல் நிலையங்களாக மாற்றப்படும்.

இதையும் படிங்க: இது மணிப்பூர் இல்ல.., தமிழ்நாடு! பேரவையில் திமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்ட முதல்வர்...

தடய அறிவியல் துறையை நவீனப்படுத்த 50 நடமாடும் தடயவியல் வாகனங்கள் வழங்கப்படும்., யாருடைய வேட்டைக்காகவும் தமிழ்நாட்டை மாற்ற விட மாட்டோம். கோவை, சிவகங்கை, நெல்லை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல் மாவட்டங்களில் புதிய காவல் நிலையங்கள் தொடங்கப்படும். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகம், பெரம்பூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் புதிய புறக்காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநகரங்களில் காவல்துறை பயன்பாட்டிற்கு 12 கோடியில் 80 ரோந்து வாகனங்கள் வழங்கப்படும். 2026-ல் திராவிட மாடல் 2.0 நிச்சயம் பார்ப்பீர்கள்., இதுவரை பார்த்தது பார்ட்-1 தான். தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க எனது பயணம் தொடரும். இவ்வாறு சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசியிருந்தார். முதலமைச்சரை பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். 

இதையும் படிங்க: போலீசாருக்கு வார விடுமுறையை உறுதி செய்யுங்கள்..! மதுரை கோர்ட் கரார் உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share