×
 

எந்த ''ஷா'' வந்தாலும் எங்கள ஆள முடியாது..! அமித்ஷாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சவால்..!

டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்குமே அடிபணியாது என முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்துகொண்டு புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ரூ.390.74 கோடி மதிப்பிலான 7,369 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.418.15 கோடி மதிப்பிலான 6,760 முடிவற்ற பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் 357. 43 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 லட்சத்து 2ஆயிரத்து 531 பயனாளிகளுக்கு வழங்கினார்.

நிக்ழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியதாவது:  பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்ததால் நிகழ்ச்சிக்கு வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது. நவீன தமிழகத்தின் சிற்பி என போற்றப்படுபவர் தான் கலைஞர். அதற்கு அடையாளம் தான் இந்த மாவட்டம். திருவள்ளுவரை சுற்றி தற்போது உள்ள தொழிற் வளர்ச்சிக்கு கலைஞர் தான் காரணம். கார் உற்பத்தியில் தொடங்கி கண்ணாடி உற்பத்தி ஆலை வரை கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்டது. சென்னை, திருவள்ளுவரை சுற்றி பல தொழில் வளாகங்கள் ஆலைகளை உருவாக்கியவர் கலைஞர். எண்ணூரில் 18,000 கோடியில் அனல் மின் நிலையப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரியபாளையம் திருவேற்காடு சிறுவாபுரி கோவில்களில் திருப்பணிகள் நடைபெறுகின்றன. அனைத்து திட்டங்களும் திருவள்ளூருக்கு செல்வது மலைப்பாக உள்ளது. முடங்கி கிடந்த உள் கட்டமைப்பு வளர்ச்சி பணிகள் தற்போது சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அதிமுக ஆட்சிக்காலத்தில் உள்கட்டமைப்பு பணிகள் முடங்கி இருந்தன.  63,000 பேருக்கு பட்டா வழங்குவது தான் மகிழ்ச்சியை தருகிறது.  கடம்பூர் தண்டலம் சாலையில் கூவம் ஆற்றின் குறுக்கே 20 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும். திருவலங்காடு அருகே கொசஸ்த்தலை ஆற்றின் குறுக்கே 23 கோடி ரூபாயில் உயர் மட்ட பாலம் அமைக்கப்படும். காக்களூர் ஊராட்சியில் தாமரைக் குளத்தை மேம்படுத்த இரண்டு கோடியில் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பழவேற்காடு ஏரியில் சூழலியல் சுற்றுலா வசதி ஏற்படுத்தி தரப்படும்.

இதையும் படிங்க: சிறுபான்மை சகோதரர்கள் உரிமைகளை பாதுகாப்போம்..! உச்சநீதிமன்றத்துக்கு முதலமைச்சர் நன்றி..!

திருமழிசை - ஊத்துக்கோட்டை சாலை கோயம்புத்தூர் 51 கோடி ரூபாயில் அகலப்படுத்தப்படும். பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கொடுத்து தன்னம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளோம். குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டித் திட்டத்தால் தாய்மார்களின் வேலை குறைந்துள்ளது. தொழிற்சாலைகள் இல்லாத மாவட்டங்களை இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளோம். வளமான தமிழ் நாடாக மட்டுமல்ல நலமான தமிழ்நாட்டையும் உருவாக்கி உள்ளோம். உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கியுள்ளோம். மணவூர்- விலாசபுரம் சாலையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் அமைக்கப்படும்.

தமிழகத்தை அடக்கி வைப்பது தான் சந்திரபாவாதிகளின் ஒரே எண்ணம்.  தமிழகத்தில் உள்ள எதிர் கட்சிகள் எதிரி கட்சிகளாக செயல்படுகின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து தான் தமிழ்நாடு போராடுகிறது. மாநில உரிமைகளின் அகில இந்திய முகமாக தமிழ்நாடு தான் உள்ளது. அரசு கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கொடுப்போம், ஹிந்தியை திணிக்க மாட்டோம், தொகுதி மறு சீரமைப்பால் தமிழ்நாட்டிற்கு தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என அமித்ஷா சொல்ல முடியுமா?

ஆளுநர்கள் மூலம் தனி ராஜாங்கம் செய்கிறார்கள் என குஜராத் முதல்வராக இருந்த போது மோடி கூறினார். நான் அழுது புலம்பவும் மாட்டேன் ஊர்ந்து செல்லவும் மாட்டேன், திமுகவின் பவர் என்ன என்று இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டது. ஒரு குழந்தைக்கு என்ன கொடுக்க வேண்டும் என்ற தாய்க்கு தெரியும், டெல்லி தீர்மானிக்க கூடாது. தமிழ்நாட்டை நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவதற்கு உழைத்துக் கொண்டே இருப்போம். டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்குமே அடிபணியாது. அப்படி ஒரு தனித்தன்மை கொண்டவர்கள் நாங்கள்.  உங்கள் பார்முலா தமிழ்நாட்டில் வேலைக்காவாது.

2026 ல் திராவிட மாடல் ஆட்சி தான். சிலரை மிரட்டி கூட்டணி வைத்துக் கொண்ட நீங்கள் ஜெயிக்க முடியுமா. உங்கள் பரிவாரங்கள் அனைத்தையும் சேர்த்துக் கொண்டு வாருங்கள் ஒரு கை பார்ப்போம். குடைச்சல் கொடுக்காமல் இருந்தால் எங்களால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். உருட்டல் மிரட்டல்களுக்கு அடி பணியும் அடிமைகள் நாங்கள் அல்ல. அமித்ஷா அல்ல எந்த ஷா இருந்தாலும் எங்களை ஆள முடியாது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை உங்கள் திட்டம் ஈடேறாது. தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

இதையும் படிங்க: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள்..! முதலமைச்சர் ஸ்டாலின், இபிஎஸ் மரியாதை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share