×
 

மை வி3 விவகாரம்..! பணத்தை ஏமாந்தவர்களுக்கு LAST CHANCE..!

My V3 செயலியில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்க மீண்டும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவையை மையமாகக் கொண்ட மை வி3 நிறுவனம் விளம்பரம் பார்த்தால் அதிக அளவில் பணம் கொடுப்பதாக கூறி மோசடி செய்துள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக சக்தி ஆனந்த் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மை வி3 விவகாரம் தொடர்பாக கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கடலூரை உலுக்கிய கௌரவ கொலை வழக்கு..! உச்சநீதிமன்றம் எடுத்த முக்கிய முடிவு..!

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புகார் அளிக்க காவல்துறை கேட்டுக் கொண்டதை தொடர்ந்து மீண்டும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அசல் ஆவணங்கள், பாஸ்போர்ட் புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் இதர ஆவணங்களுடன் நேரில் வந்து புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மை வி3 செயலியில் ஏமாந்தவர்களுக்கு ஒரு வாய்ப்பாக பணத்தை இழந்ததற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: கலைஞர் பல்கலை.-க்கு கீழ் 17 கல்லூரிகள்... சட்ட முன்வடிவு தாக்கல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share