×
 

கலைஞர் பல்கலை.-க்கு கீழ் 17 கல்லூரிகள்... சட்ட முன்வடிவு தாக்கல்..!

கும்பகோணத்தில் அமைய உள்ள கலைஞர் பல்கலைக்கழகத்திற்கான சட்டம் முன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

சட்டசபை உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைகளின் அடிப்படையில் கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.இந்த நிலையில் கலைஞர் பல்கலைக்கழகத்திற்கான சட்ட முன்கடிவை பேரவையில் அமைச்சர் கோவி.செழியன் தாக்கல் செய்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வேந்தராக கொண்டு கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைய உள்ளதாகவும், கலைஞர் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சர் இருப்பார் என்றும் தெரிவித்தார். மேலும் கலைஞர் பல்கலைக்கழகத்தின் கீழ் 17 கல்லூரிகள் செயல்படும் என்றும் சட்ட முன்வடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காவலர்களுக்கான சேம நலநிதி ரூ.8 லட்சமாக உயர்வு..! பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு செம ட்ரீட்..! பேரவையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share