×
 

ஊட்டி, கோத்தகிரி போறவங்களுக்கு இனி கவலையில்ல... அமைச்சர் சொன்ன குட் நியூஸ்...!

மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் மண் சரிவை தடுக்க மண் ஆணி எனப்படும்  சாயல் நேயிலி என்ற புதிய தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டு வரும் பணிகளை நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. .வேலு ஆய்வு செய்தார் 

கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி  மற்றும்  கோத்தகிரி சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. போக்குவரத்து  பாதிக்கப்படுவதை தடுக்க  டெல்லி ஐஐடி பேராசிரியர்கள் வழிகாட்டுதலின்படி மண் ஆணி எனப்படும் சாயல் நெயில் என்ற புதிய தொழில்நுட்பம் மூலம் மண்சரிவை தடுக்க புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மண் சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து அந்தப் பகுதியில் மண்ணில் நான்கு அல்லது ஐந்து மீட்டர் அளவுக்கு மண்ணில் துளையிட்டு அதில் சிமெண்ட் கலவை பூச்சை உள்ளே நுழைத்து அதற்கு பின்னர் வலைகளை பயன்படுத்தி மூடக்கூடிய வகையில் அந்த தொழில்நுட்பம் கையாளப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: நத்தை வேகத்தில் தேனி-மதுரை நெடுஞ்சாலை பணி.. தமிழக அரசிடம் சலித்துக்கொண்ட ஓபிஎஸ்.. அமைச்சரின் அதிரடி பதில்..!

இந்த தொழில்நுட்பத்தின் கீழ்  மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் 2 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. குஞ்சப்பனை அருகே சாலையின் ஓரத்தில் நடைபெற்று வரும் இப்பணிகளை தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் இன்று நேரில் வந்து ஆய்வு செய்தார் .

மண் சரிவு ஏற்படக்கூடிய பகுதியில் ஏற்படுத்தி வரும் புதிய தொழில்நுட்பம் எந்த அளவுக்கு முடிவுற்றுள்ளது அதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் . பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ. வேலு
நீலகிரி மாவட்டத்தில் ஏற்கனவே ஏற்பட்ட நிலச்சரிவின்போது இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டு வந்த நிலையில் தற்போது அது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். 

கடந்த முறை ஏற்பட்ட மண் சரிவு நான்கு இடங்களில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தடுப்புகள் அமைக்கப்பட்டதாகவும் தற்பொழுது அந்த திட்டம் நல்ல முறையில் கை கொடுத்துள்ளதால் மேலும் மண் சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் சாயல் நேயிலி தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டு வருவதாக  தெரிவித்தார்.

இதையும் படிங்க: இழுத்து மூடப்பட்ட கடைகள்; ஆபத்பாந்தவனாக மாறிய அம்மா உணவகங்கள்....!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share