பலமுறை மனு அளித்தும் பரிசீலனை செய்யப்படாததால் ஆத்திரம்.. விபரீத முடிவில் இறங்கிய மாற்றுத்திறனாளி..
கால்களை இழந்த மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர வாகனம் கேட்டு பலமுறை மனு அளித்தும் வழங்காததால் பூச்சிகொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த கிருஷ்ணன் பச்சேரி பகுதியை சார்ந்தவர் முத்துமாரி 40 வயது மதிக்கத்தக்க இவர் காலை இழந்த மாற்றுத்திறனாளியாக உள்ளார். மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் சார்பில் வழங்கப்படும் மூன்று சக்கர வாகனம் தனக்கு வழங்கக் கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை இவர் மனு அளித்ததாக தெரிகிறது ஒவ்வொரு முறை மனு அளிக்கும் போதும் ஆட்சியர் மூன்று சக்கர வாகனம் கிடைத்துவிடும் என்ற உறுதி மொழியை இவருக்கு அளித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த முத்து மாரி ஆட்சியரை சந்தித்து மேலும் ஒரு மனு அளிக்க முயன்றதாக தெரிகிறது.ஆட்சியரை சந்திக்க செல்ல முடியாத நிலையில் தான் கையோடு கொண்டு வந்த பூச்சிக்கொல்லி மருந்தை அவர் குடித்துள்ளார். பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் ஆட்சியர் அலுவலக வளாக வாயிலில் போராடிய நிலையில் அங்கு காவல் பணி மேற்கொண்டு வந்த காவலர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.
30 நிமிடங்கள் கழித்தும் ஆம்புலன்ஸ் வராத நிலையில், அருகில் உள்ள ஆட்டோவை வரவழைத்து அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அவர் சென்ற பிறகு 15 நிமிடங்கள் கழித்து ஆம்புலன்ஸ் அப்பகுதிக்கு வந்து சேர்ந்தது. ஆபத்தான நிலையில் முத்துமாரி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பங்குனி கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்..!
இதனிடையே ஏராளமான அரசு அலுவலர்களின் வாகனங்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்தும் அதன் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கையை அலுவலர்கள் எடுக்கவில்லை. ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே 108 ஆம்புலன்ஸ் வழக்கமாக நிற்கும் நிலையில் இன்று அந்த ஆம்புலன்ஸ் நெல்லை வந்த கேரளா மாநில முதலமைச்சரின் பாதுகாப்பிற்காக கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது நகர்புறத்திலேயே ஆம்புலன்சை அழைத்து 45 நிமிடங்கள் தாமதமாக வாகனம் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே மாற்றுத்திரனாளியான தனக்கு மூன்று சக்கர வாகனம் கேட்டு பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை . ஒவ்வொரு முறையும் வழங்குவதாக கூறி ஏமாற்றி விட்டனர். ஏற்கனவே 50 m | பூச்சி கொல்லி மருந்து சாப்பிட்டு விட்டேன் தற்போது 100ml குடித்து விட்டேன். பிழைப்பது மிகவும் கடினம் என்று தெரிவித்தார் . ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பூச்சி கொல்லி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் பழைய கட்டணமே வாகனங்களுக்கு வசூலிக்கப்படுகிறது - டோல்கேட் நிர்வாகம்..!