×
 

வேடிக்கை பார்க்கும் புலிகள்.. ரசித்த சுற்றுலா பயணிகள்.. வைரல் புகைப்படம்..!

வால்பாறையில் மக்கள் வசிக்கும் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் பாறையில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்த தொடங்கியுள்ள நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து காட்டை விட்டை விட்டு வெளியேறும் சிறுத்தை, கரடி, யானை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

குறிப்பாக, வால்பாறை நகர்ப்புற பகுதி புது தோட்டம், பழைய வால்பாறை, வாழத்தோட்டம், ரொட்டிக்கடை, கவர்கல் வாட்டர் ஃபால், சேக்கல் முடி, சோலையார் அணை ஆகிய பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதி விட்டு வெளியே வரும் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: கோவையில் புலி அட்டகாசம்.. வீட்டை விட்டு வெளியேற அஞ்சும் பொதுமக்கள்

இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்கள் பணிக்கு செல்லும் பொழுது வீட்டின் கதவை நன்றாகப் பூட்டி வைக்கவும், தாங்கள் வளர்க்கும் வளர்ப்புப் பிராணிகள் மாடுகள், கோழிகள் ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைக்கவும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், தனியாருக்குச் சொந்தமான வாழைத்தோப்பு பகுதியில் உள்ள எஸ்டேட்டில் ஒரு பாறையில் இரண்டு சிறுத்தைகள் சாகவாசமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. அதனால், அப்பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியேறுவதற்கே அசத்தில் மூழ்கியுள்ளனர்.

இதையும் படிங்க: சிறுத்தை தாக்கி பெண் பலி.. வனத்துறையினர் விசாரணை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share