×
 

கோவையில் புலி அட்டகாசம்.. வீட்டை விட்டு வெளியேற அஞ்சும் பொதுமக்கள்

கோவையில் சிறுத்தை அட்டகாசத்தை தடுக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க விவசாயிகளும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர் 

கோவை மாவட்டம், மதுக்கரை அருகே உள்ள முருகன்பதி, பழைய மந்தை தோட்டத்தில் வசிக்கும் தங்கராஜ் என்பவரது தோட்டத்தில் கட்டப்பட்டு இருந்த ஆட்டை சிறுத்தை ஒன்று நேற்று இரவு கொடூரமாக தாக்கி கொன்று உள்ளது. தங்கராஜ் தனது தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல் நேற்று இரவும் ஆடுகளை தோட்டத்தில் கட்டி விட்டு வீட்டிற்குச் சென்று உள்ளார். இன்று காலை ஆடுகளைப் பார்க்க வந்த போது, ஒரு ஆடு சிறுத்தையால் தாக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சிறுத்தையின் கால் தடங்கள் சம்பவ இடத்தில் காணப்பட்டதால், இது சிறுத்தையின் தாக்குதலாக இருக்கலாம் என வனத் துறையினர் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு உள்ள சிறுத்தையின் கால் தடங்களை ஆய்வு செய்து, இது சிறுத்தையின் தாக்குதல் தானா ? என்பதனை உறுதி செய்து அதனைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கடந்த சில நாட்களாக இப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே, வனத் துறையினர் இப்பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து பிடிக்க முடியாமல் உள்ளதால், வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி அதனை உடனடியாக பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

இதையும் படிங்க: சிறுத்தை தாக்கி பெண் பலி.. வனத்துறையினர் விசாரணை!

மேலும், இப்பகுதியில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என்றும், தங்கள் கால்நடைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வனத் துறையினர் அறிவுறுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கண்டலேறு அணையிலிருந்து தமிழகம் வந்தடைந்த கிருஷ்ணா நதி நீர்.. மலர் தூவி வரவேற்ற அதிகாரிகள்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share