×
 

அம்பேத்கர் பிறந்தநாள்..! பிரதமர் மோடி, ஜனாதிபதி மரியாதை..!

அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்த நாளை ஒட்டி அவரது திருவுருவச் சிலைக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் வைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் உள்ளிட்டோரும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: இளைஞர்களுக்கான கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை எப்படி உருவாக்கப் போகிறீர்கள்? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி..!

இதையும் படிங்க: பாஜகவோடு கைக்கோர்த்ததில் பெருமை..! இது முன்னேற்றத்திற்கான கூட்டணி.. மார்தட்டிக் கொள்ளும் இபிஎஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share