வலைதளத்தில் பெண் போல் பேசி மோசடி.. லட்சக்கணக்கில் வாரி இறைத்த இளைஞர்..
தேனியில் பெண் அடையாளத்துடன் பேசி இளைஞரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதற்காக, ஆன்லைன் செயலியில் தனது சுயவிவரம் குறித்து பதிவு செய்து பெண் தேடி வந்துள்ளார். அப்போது அந்த ஆன்லைன் செயலியில் ஹரிணி என்று பதிவு செய்யப்பட்டிருந்த ஐ.டியில் இருந்து நபர் ஒருவர் இளைஞரிடம் பேச தொடங்கி உள்ளார்.
இதன்பின் இருவரும் வாட்ஸ் அப் மூலம் பேசி வந்துள்ளனர். அப்போது ஹரிணி என்ற பெயரில் அறிமுகப்படுத்தி கொண்ட நபர், இளைஞரிடம் அவரது தந்தை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து பெரிய அளவில் லாபத்தை பெற்று வருவதாக கூறி அதற்கான ஆதாரங்களையும் காட்டி உள்ளார்.
கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் நல்ல லாபம் வரும் எனக்கூறி இளைஞரிடம் 88 லட்சத்து 58ஆயிரத்து 988 ரூபாய் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்தும் அந்த நபர் இளைஞரிடம் திடீரென பேச்சை நிறுத்தியதால் சந்தேகம் அடைந்த இளைஞர் இது குறித்து தேனி சைபர் கிரைம் போலீசிடம் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: கல்குவாரியால் கதறும் தூத்துக்குடி மக்கள்.. அலட்சியம் காட்டும் கனிமவள அதிகாரி..!
இளைஞர் அணித்த புகாரி அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் ஒரு கட்டமாக இளைஞர் இரண்டு வங்கி கணக்குகளுக்கு 25க்கும் மேற்பட்ட முறை பணம் அனுப்பியது தெரிய வந்தது. தொடர்ந்து பணம் அனுப்பப்பட்ட வங்கி கணக்குகளை சோதனை செய்ததில் அந்த வங்கிக்கணக்குகள் கூலி வேலை செய்யும் இரண்டு பெண்களுடையது என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது வங்கிக் கணக்கை கொடுத்தால் கமிஷன் தருவார்கள் என தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களிடம் பணம் கொடுத்து வங்கி விவரங்களை பெற்று மோசடியில் ஈடுபட்டது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நந்தகோபால் (30) என்பதை தெரியவந்தது.
நந்தகோபாலையை போலீசார் மடக்கி பிடித்த விசாரணை மேற்கொண்ட போது, பணத்தை யுவராஜ் பத்மநாபன் ஹா என்பவர்களிடம் கொடுத்து வைப்பது வைத்திருப்பதாக விசாரணையில் தெரிவித்தார். தொடர் விசாரணையில் இவர்கள் ஆன்லைன் செயலி மூலம் கம்போடியா நாட்டில் உள்ள குற்றவாளிகளுடன் நேரடி தொடர்பில் இருப்பதாகவும், திருமண வலைதள செயலி மூலம் பெண் பெயரில் போலியாக முகவரி வைத்து மோசடி செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து, நந்தகோபாலின் வாக்குமூலத்தின் படி இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்ட ஆறு பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 29 டெபிட் கார்டுகள், 12 வங்கி புத்தகங்கள், 46 சிம்கார்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: மெகாபூகம்பம் வரலாம்.. சுனாமியால் 3 லட்சம் பேர் உயிரிழக்கலாம்: ஜப்பான் அரசு புதிய எச்சரிக்கை..!