×
 

வேலூரில் இளைஞர் துணிகரம்.. சினிமா பாணியில் மடக்கி பிடித்த போலீசார்..!

வேலூர் அருகே பேருந்தில் பயணியிடமிருந்து 5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற இளைஞரை சினிமா பாணியில் போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் தற்போது பேச பொருளாகியுள்ளது.

வேலூர் புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தபோது சிற்றுண்டி சாப்பிடுவதற்காக பையை பஸ்சுக்குள் வைத்து விட்டு கீழே இறங்கிச் சென்றுள்ளார். சிற்றுண்டி வாங்கிக் கொண்டு வந்து பார்த்தபோது பேருந்தில் தனது இருக்கையில் வைத்திருந்த பையில் இருந்த ரூ.5 லட்சம் பணம் மாயமாகி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் செல்வக்குமார் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ததில் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் என்பவர் ரூ.5 லட்சம் பணத்தை திருடி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு புகார் கிடைத்தவுடன் விசாரணையை மேற்கொண்ட போலீசார் 9 மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்ததோடு திருடிச் செல்லப்பட்ட பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறும்போது, ''பணத்தை இழந்த நபர் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் இரவு 9 மணிக்கு புகார் அளித்தார். அதன்பேரில் பஸ் டிரைவர் மற்றும் நடத்துனர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் பணத்தை திருடிச் சென்ற நபர் டிக்கெட் கட்டணத்திற்காக ஜி பேயில் பணம் செலுத்தியது குறித்து கண்டக்டர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விசாரணைக்கு அழைத்துச் சென்ற நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. போலீசாருக்கு அதிகரித்த பதற்றம்..!

இதைத்தொடர்ந்து ஜிபேயில் இருந்த தொலைபேசி எண்ணை வைத்து டவர் லொகேஷன் பதிவு செய்யும் பணி நடந்தது. இதன் அடிப்படையில் பணத்தை திருடிக் கொண்டு சென்ற அந்த நபர் சேலம் நோக்கி செல்வது உறுதி செய்யப்பட்டது.

உடனே 3 போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து குற்றவாளியை பிடிப்பதற்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டது. அதே நேரம், தொடர்ந்து குற்றவாளியின் எண்ணை கொண்டு டவர் லொக்கேஷன் ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் குற்றவாளி கரூர் பகுதியை நெருங்கும்போது அங்கு தயாராக காத்திருந்த போலீசார் கதிர்வேல் என்பவரை கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர்.

மேலும் திருடி செல்லப்பட்ட ரூ.5 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிர்வேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பணம் திருடப்பட்ட 9 மணி நேரத்தில் போலீசார் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்துள்ளதோடு, ரூ.5 லட்சம் பணத்தையும் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். காவல் துறையினரின் துரிதமாக செயல்பாடு பல்வேறு தரப்பினர் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி சர்ச்சை; மே 2-ஆம் தேதி இபிஎஸ் அதிரடி அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share