×
 

கடற்கரையில் அமர்ந்திருந்த ஜோடி.. கேள்வி கேட்ட காவலர்.. மிரட்டுவதற்கு அதிகாரம் இல்லை என்று வசைபாடிய பெண்.. நடந்தது என்ன?

சென்னை மெரினா கடற்கரையில் இரவு நேரத்தில் அமர்ந்திருந்த ஜோடியிடம் நீங்கள் கணவன் மனைவியா என்று காவலர் ஒருவர் கேள்வி எழுப்பவே அவரிடம் பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

சென்னை மக்களின் பிரதான பொழுதுபோக்கு மையமாகவும், ஆதரவற்ற பலரின் வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது மெரினா கடற்கரை. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இளைப்பாருவதற்கான  முக்கிய இடமாக இருந்து வருகிறது. அந்த வகையில் பலர் பல்லாயிரக்கணக்கான பேர் வந்து செல்லும் இடம் என்பதால் போலீசார் பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து போனையில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு கடற்கரை மணலில் ஜோடி ஒன்று அமர்ந்திருந்தது. 

அப்போது அந்த ஜோடியிடம் காவலர் ஒருவர் நீங்கள் கணவன் மனைவியா..? ஏன் இந்த நேரத்தில் இங்கு உட்கார்ந்திருக்கிறீர்கள்..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த ஜோடி கேள்வி எழுப்பிய காவலரை பதில் கேள்விகளால் அடுக்கியுள்ளனர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கனத்த குறளில் பேசிய காவலரை பெண் ஒருவர் சரமாதிரியான கேள்விகளால் தாக்கியுள்ளார். குறிப்பாக ஏன் பீச்சில் கணவன் மனைவி தான் உட்கார வேண்டுமா..? ஆணும் பெண்ணும் பீச்சில் உட்காரக் கூடாது என ஏதேனும் சட்டம் இருக்கிறதா..? ஒரு பெண்ணும் ஒரு ஆணும் பீச்சில் அமரக்கூடாதா என துப்பாக்கியில் இருந்து வெளிவரும் தோட்டாக்கள் போல் கேள்வியை அடுக்கியுள்ளார்.

இதையும் படிங்க: தேவநாதன் யாதவ் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதா? இல்லையா? காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!

 தொடர் கேள்விகளால் மிரண்டு போன காவலர், அந்த ஜோடியிடம் நான் உங்களிடமிருந்து ஒரு பாடம் கற்றுக் கொண்டேன் தனியாக இருப்பவர்களை எப்படி டீல் செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்டேன் என இறங்கி பேசி அங்கிருந்து தப்பித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண், வக்கீல் என்பது அவரது சமூக வலைதள பக்கத்திலிருந்து தெரியவந்தது.

முன்னதாக, அப்பெண் அவரது சமூக வலைதள பக்கத்தில், பட்டினம்பாக்கம் ரோந்து போலீஸ் எஸ்சையும் போலீஸ்காரரும் குண்டர்களைப் போல செயல்பட்டனர் என்றும் அவர்களை வன்மையாக கண்டிப்பதாகவும் இப்படியே பொதுமக்களை மிரட்டும் அதிகாரம் இவர்களுக்கு இல்லை என காவலர் அடுக்கிய கேள்விகளை வீடியோவாக பதிவு செய்து பதிவேற்றியுள்ளார்.இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தைப் பெற்று சமூக ஆர்வலர்கள் மற்றும் நெட்டுசன்களின் வசை பாடலுக்கு உள்ளாகி உள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் தலைதூக்கியுள்ள சிஐடியு - சாம்சங் பிரச்னை.. தமிழக அரசுக்கு எழுந்த கூடுதல் சங்கடம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share