×
 

பொங்கல் பரிசுத்தொகுப்பை இன்னும் வாங்கவில்லையா.? உங்களுக்கு இன்னொரு சான்ஸ்.!

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஜனவரி 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் திருவிழாவையொட்டி பொங்கல் பரிசு தொகுப்புத் திட்டம் 2009இல் தொடங்கப்பட்டது. முதலில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை என வழங்கப்பட்டது. பிறகு ரூ.100, ரூ. 1000, ரூ.2500 என்றெல்லாம் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு வரை ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு என மூன்று பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டன. ரூ.1000 ரொக்கம் வழங்கப்படவில்லை. ரொக்கம் வழங்காதது பற்றி சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் கேள்வி எழுப்பியபோது, "தேர்தல் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்" என்று அமைச்சர் துரைமுருகன் இது தேர்தலுக்கான திட்டம் போல வெளிப்படையாகப் பேசினார். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பை 33 லட்சம் குடும்பத்தினர் பெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

தமிழகம் முழுவதும் 34,793 நியாய விலைக்கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புப் பெற தகுதி வாய்ந்தவர்கள். இந்த சூழலில், ஜனவரி 18-ம் தேதி வரை 1 கோடியே 87 லட்சத்து 14 ஆயிரத்து 464 குடும்பத்தினர் பொங்கல் பரிசுத்தொகுப்பைப் பெற்றுள்ளனர். அதாவது, இதுவரை 85 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

பொங்கல் விடுமுறைக்கு ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு சென்றதால், அவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பைப் பெறவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி வரும் 25-ம்- தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்காத 33 லட்சம் பேர்.. திமுக அரசு மீது மக்களுக்கு கோபம்.. பிரேமலதா கணிப்பு!

இதையும் படிங்க: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு : 14 காளைகளை அடக்கிய வீரர் முதலிடம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share