×
 

வீரியமெடுக்கும் பொன்முடி விவகாரம்.. கேஸ் போடாவிட்டால் அவ்வளவு தான்.. எச்சரித்து அனுப்பிய ஐகோர்ட்..!

அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய தவறினால் நீதிமன்ற அவமதிப்பு பாயும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி கலந்துக் கொண்டு பேசினார். அப்போது, தான் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படிக்கும் நாட்களில் அடல்ட்ஸ் ஒன்லி பட்டிமன்றத்தை திராவிடர் கழகத்தினர் தமிழ்நாடு முழுவதும் நடத்தி வந்ததாகக் கூறி பேசத் தொடங்கினார். மகளிர் தவறாக நினைக்க வேண்டாம் எனக் கூறிவிட்டு, பாலியல் தொழிலாளருக்கும் வாடிக்கையாளருக்கும் நடந்த உரையாடல் எனக் குறிப்பிட்டு ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். மீண்டும் அதற்கான விளக்கத்தையும் பொன்முடி அளித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பொன்முடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த தி.மு.க எம்.பி கனிமொழி, அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் எந்தக் காரணத்துக்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கவை எனவும் கூறி இருந்தார்.

இதன் தொடர்ச்சியாக தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் பொன்முடி விலக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அவருக்கு பதிலாக  அந்தப் பொறுப்பில் திருச்சி சிவா நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. கட்சி பொறுப்பில் இருந்து விலக்கியதை போலவே அமைச்சர் பதவில் இருந்தும் பொன்முடியை நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

இதையும் படிங்க: கெஜ்ரிவால் போல ஸ்டாலினும் ஜாமினில் வந்து பிரசாரம் செய்வார்.. கே.பி.ராமலிங்கம் கணிப்பு!

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்முடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், பொன்முடிக்கு எதிராக ஏதேனும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினர். இதுகுறித்து இன்று மாலை 4.45 மணிக்கு டிஜிபி பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தனர். 

இந்த நிலையில்,  மீண்டும் வழக்கின் விசாரணை தொடங்கிய போது, உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எச்.ராமன் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். அப்போது, பொன்முடியின் பேச்சு தொடர்பாக 5 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக கூறினார். அப்போது ஒரு புகார் மீது மட்டும் பதிவு செய்யுங்கள் என்று கூறிய நீதிபதி, கூடுதல் வழக்குகள் பதிவு செய்தால் விசாரணை நீர்த்துப் போய்விடும் என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் பொன்முடி மீதான புகாரில் எப்போது வழக்குப்பதிவு செய்யப்படும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, புகார் இல்லாமலேயே அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் பொன்முடி வீடியோ சமூக வலைதளங்களில் இன்னும் பரவுகிறது எனவும் விசாரணை சுட்டிக்காட்டினார்.

உயர்நீதிமன்ற நீதிபதி கூறிய கருத்துக்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து, பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய தவறினால் நீதிமன்ற அவமதிப்பு பாயும் என கூறி வழக்கு விசாரணையை வரும் 23ஆம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: 'பேடியே… கேடியே… பொன்முடிக்கு செருப்பைத் தூக்கி எதிர்ப்பு... அதிமுக மகளிரணியின் அறிவார்ந்த போராட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share