×
 

இந்து சமயங்களை இழிவுபடுத்தியுள்ளார் பொன்முடி - உயர்நீதிமன்றம் அதிரடி..!

அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை, இது துரதிர்ஷ்டவசமானது.

பொன்முடியின் சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ''பொன்முடியின் கருத்துக்கள் பெண்கள் மற்றும் சைவ, வைணவ சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. அமைச்சர் பொன்முடியின் பேச்சு, ஆபாசம் தவிர்த்து இரு சமயத்தினரையும் புண்படுத்தியுள்ளது. அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை, இது துரதிர்ஷ்டவசமானது.

முன்னதாக,உயர்நீதிமன்ற நீதிபதி ஆனன்ந்த வெங்கடேஷ், ''இந்து சமயங்களை இழிவு படுத்தியுள்ளார் பொன்முடி. பொன்முடியின் கருத்துகள் இந்து சமயத்தை, பெண்களை இழிவுப்படுத்துவதாக அமைந்துள்ளது. பேசியதை பொன்முடி ஒப்புக்கொண்டுள்ளார். கட்சி நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது, போலீஸ் நடவடிக்கை எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது.

இதையும் படிங்க: 2026இல் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும்.. எடப்பாடியார் முதல்வர் ஆவார்.. மாஜி அமைச்சர் பா.வளர்மதி தாறுமாறு!

அமைச்சர் என்பதால் பொன்முடிக்கு  காவல்துறை சலுகை வழங்க முடியாது. சைவ, வைணவ சமயங்களின் பட்டையும், நாமமும் புனிதமானது. ஆபாசமாக மட்டும் அவர் பேசவில்லை, இரு சமூக மக்களையும் அவமானப்படுத்தியுள்ளார். 

இதுபோன்ற விவகாரங்களில் உச்ச நீதிமன்ற உத்தரவும், பொன்முடிக்கு இடப்பட்ட உத்தரவையும் சுட்டிக்காட்டி  பொன்முடிக்கு எதிராக தலைமை நீதிபதி அமர்வு விசாரணை நடத்த வேண்டும். அதற்காக நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை கையிலெடுக்கவேண்டும்" என பதிவாளருக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: முதல்வர் இதைச் செய்யாதது தமிழக மகளிருக்கு அவமானம்... அமைச்சரின் ‘அவுட் ஆஃப் கன்ட்ரோல்’ பேச்சை டார்கெட் செய்த ஜி.கே.வாசன்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share