×
 

பொன்முடி அதிரடி நீக்கம்… ஆபாசப்பேச்சு... அத்தனையும் போச்சு... உச்சபட்ச கோபத்தில் மு.க.ஸ்டாலின்..!

அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய‌ பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது.

சில தினங்களுக்கு முன்பு தந்தை பெரியார் விழா பொதுமேடையில் பெண்கள் மத்தியில், வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசிய பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

''காமச்சுவையை பரப்புவதில், இங்கே மகளிர் எல்லாம் கொஞ்சப்பேர் இருக்குறாங்க. ஆனால் மகளிருக்கே நிறைய பேருக்கு டிக்கெட் கொடுத்தவர் ராமகிருஷ்ணன்.அதில் ஒரு இடத்தில் சொல்லுவோம். (பலமாக சிரித்துக் கொண்டே...) தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள் மகளிர். விலைமாதுவின் வீட்டிற்கு ஒருத்தன் போகிறான்.போகும்போது அங்கே அந்த அம்மா கேட்குது.

நீங்க சைவமா? வைணவமா? எனக் கேட்கிறார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பணம் ஏதாவது 5 கொடு கொடு, 10 கொடு எனக்கேட்டால் புரிந்து இருக்கும். என்னடா இங்கே வந்து இந்தப்பெண் சைவமா? வைணவமா எனக் கேட்கிறார்..? எனக்கு ஒண்ணும் புரியவில்லையே எனக் கேட்டான். அதற்கு அந்த விலைமாது சைவம் என்றால் இப்படி..? வைணவம் என்றால் இப்படி என கைகைகளை வைத்து விவரிக்கிறார். அவனுக்கு ஒண்ணும் புரியல.

அந்த விலைமாது சைவம் என்றால் படுத்துக் கொள்வது. வைணவம் என்றால் நின்று கொண்டு செய்வது? நின்று செய்தால் 5... படுத்துக் கொண்டால் 10...'' எனச் சொல்லிவிட்டு பொன்முடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.   அவர் பேசிய வீடியோ வைரலாகி கடும் விவாதங்களை கிளப்பியது

இதையும் படிங்க: பொன்முடியின் ஆபாசப் பேச்சு! தப்பு தப்புதான்... கனிமொழி எம்.பி. கண்டனம்..!

 பொதுமக்கள் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.  ''அமைச்சராக இருப்பதற்கு  துளியும்  தகுதி இல்லாத நபர் தான் இந்த பொன்முடி. மேடையில் இவ்வளவு ஆபாச நிறைந்த வார்த்தைகளை பயன்படுத்தி திமுககாரரால்தான் பேச முடியும் என்பதை இந்த பொன்முடி மீண்டும் நிருபித்துள்ளார். பெண்ணியம் பேசும் சகோதரி கனிமொழி, பொன்முடியின் இந்த ஆபாச பேச்சை கண்டிப்பாரா? ஈ.வெ.ராவின் வழியில் வழுவாது நடப்பவர் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி. அவர் வழியில் வண்டைத் தமிழில் பேசுகிறார். திருவள்ளுவர் அவையடக்கம்  என்றொரு அதிகாரம் 10 குறள்கள் அருளி இருக்கிறார்.அவையை அசிங்கப்படுத்துவதில் ஈவெரா முதல் பொன்முடி வரை கடும் போட்டி!இராமசாமி கும்பலின் மேடை, ஆபாச மேடை தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ஓசி புகழ் பொன்முடி!

பொன்முடி எல்லாம் ஒரு வாத்தியாரா இருந்ததை நினைத்தாலே கஷ்டம். இந்த ஆள் மந்திரி வேறு. தமிழகம் தகுதி அவர்கள் தேர்ந்து எடுப்பவர்களை பார்த்தாலே தெரிகிறது. இப்படியே போனா தமிழன் என்றால் பல நாடுகள் விசா கூட தராது. நான் சும்மா சொல்லவில்லை. அரசியல் நாகரிகத்தின் மோசமான முகம் அமைச்சர் பொன்முடி'' எனக் கண்டித்து !

இந்நிலையில் திமுக துணைப் பொதுச்செயாளர்களில் ஒருவரான கனிமொழி எம்.பி, ''அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய‌ பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது'' எனத் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வெளியிட்டுள்ள அறிக்கையில் ,  கழக துணைச்செயலாளர் பதவி வகித்து வரும் பொன்முடி அப்பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்'' என அறிவித்துள்ளார்.  எப்போதும் பொதுச்செயலாளர் மட்டுமே கட்சியின் பதவியில் இருப்பவரை நீக்கி அறிக்கை வெளியிடப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை பொன்முடியை நீக்குவதாக மு.க.ஸ்டாலினே அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விலைமாது வீட்டில் படுத்துக்கிட்டா..? நின்னுக்கிட்டா..? ஸ்டாலினின் தூக்கம் கெடுத்த பொன்முடியின் பதவிக்கு ஆபத்து..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share