×
 

கருமம்.. கருமம்... அரசு கேபிளில் ஆபாச திரைப்படம்... தலையில் அடித்துக் கொண்ட தருமபுரி மக்கள்...!

தருமபுரி மாவட்ட அரசு கேபிளில் உள்ள தனியார் டிவி சேனலில் ஆபாசப்படம் ஒளிபரப்பானதால், அந்த சேனலை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தருமபுரி மாவட்ட அரசு கேபிளில் உள்ள தனியார் டிவி சேனலில் ஆபாசப்படம் ஒளிபரப்பானதால், அந்த சேனலை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த முறை அதிமுக ஆட்சியில் இருந்த போது, மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்க, அரசு கேபிள் டிவி தொடங்கப்பட்டது. மாதம் 70 ரூபாய் சந்தா கட்டணத்தில், தனியார் கேபிள் டிவி நிறுவனங்களை விட டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஏராளமான சேனல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் 14 லட்சம் பயனர்கள் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர். 

 இந்நிலையில், நேற்று மதியம் தருமபுரி மாவட்டத்தில் ஒளிபரப்பான தனியார் உள்ளூர் சேனல் ஒன்றில் ஆபாசப்படம் ஒளிபரப்பானது. சேனலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் அரசு கேபிள் டிவி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 3 மாநிலத்தில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த உத்தரவிடுங்கள்... உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!

 சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் சேனல் ஒன்று தான் ஆபாச படத்தை ஒளிபரப்பியுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக அந்த சேனலின் ஒளிபரப்பை நிறுத்திய தருமபுரி அரசு கேபிள் டிவி தாசில்தார் ராஜராஜன், சம்மந்தப்பட்ட சேனல் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே திமுக ஆட்சிக்குப் பின்னர் அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் முடக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. நிறைய இடங்களில் அரசு கேபிள் டி.வி.யின் தரம் குறைக்கப்பட்டதாகவும், அதையும் முடக்க திமுக அரசு திட்டமிட்டு வருவதாகவும் அதிமுகவினர் குற்றச்சாட்டி வரும் நிலையில், தருமபுரியில் அரங்கேறிய இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: நடிகர் சந்தான பாரதியை இரும்பு மனிதர் ஆக்கிய கரும்பு உள்ளம் கொண்ட சங்கிகளுக்கு வாழ்த்துகள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share