3 மாநிலத்தில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த உத்தரவிடுங்கள்... உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!
தமிழகம், கேரளா, மேற்கு வங்க மாநில அரசுகள் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளா, மேற்கு வங்க மாநில அரசுகள் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் தேசியக் கல்விக்கொள்கை மூலம் இந்தி மொழியைத் திணிக்க மத்திய அரசு முயல்கிறது என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறார். இந்தச் சூழலில் இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். அவர் அந்த மனுவில் கூறுகையில் “ கேரளா, தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களும், அடிப்படை உரிமையான குழந்தைகளின் கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டும். இதற்காக மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, தேசியக் கல்விக் கொள்கையை 3 மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும்.
தேசியக் கல்விக் கொள்கையில் இந்தி என்ற வார்த்தை ஒருமுறைதான் குறிப்பிடப்படுகிறது. இந்த தேசியக் கல்வியில் எந்த இடத்திலும் ஒட்டுமொத்த கொள்கையும் இந்தியை திணிப்பதாக கூறவில்லை, மாநில அரசுகள் குழந்தைகளுக்கு கட்டாயம் இந்தியை கற்பிக்க வேண்டும் என்றும் கூறவில்லை.
இதையும் படிங்க: பாஜக ஆரம்பித்துள்ள கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு எப்படி..?
ஆனால், தமிழகத்தின் முதல்வர் தேசியக் கல்விக்கொள்கை சமூக நீதியைக் குறைத்துவிட்டது போலவும், தமிழ் மொழி மீது தாக்குதல் நடத்தியதுபோலவும் பேசுகிறார். தமிழகத்துக்கும், தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக இருப்பதுபோல் முதல் சித்தரிக்கப்படுகிறது. தமிழக அரசின் நிலைப்பாடும், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தேசியக் கல்விக்கொள்கைக்கு எதிரான நிலைப்பாடு என்பது, அரசியல் நோக்கத்தோடு செயல்படுகிறார்கள் என்பதை காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.
மத்திய அரசைப் போல், மாநில அரசுக்கும் கல்வியில் பங்கு இருக்கிறது. அரசியலமைப்புப் பொதுப் பட்டியலில் கல்வியும் இருக்கிறது. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள் என நேரடியாக மாநிலங்களிடம் கூற உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம்இல்லை, மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யுங்கள் எனக் கூறவும் அதிகாரமில்லை. அடிப்பை உரிமைகள் பாதிக்கப்பட்டால்தான் உச்ச நீதிமன்றம் தலையிடும்.
இதையும் படிங்க: சென்னை வரும் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர்... கருப்புக் கொடியுடன் திரளும் மாணவ அமைப்புகள்..!