மாணவிகளிடம் அத்துமீறிய பேராசிரியர்.. புகாரை கண்டுகொள்ளாத கல்லூரி முதல்வர்.. ஆட்சியர் அதிரடி..!
தூத்துக்குடி அருகே தொழில்நுட்ப அரசு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் செயல்பட்டு வரும், அரசு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரில் 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் இந்த கல்லூரியில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், கல்லூரியில் பயிலும் மாணவிகள் மூன்று பேர், மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியர் மதன் குமார் பாலியல் தொல்லை கொடுப்பதாக கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரைப் பெற்ற கல்லூரி முதல்வர், அதனை பெண்கள் பாதுகாப்பு குழுவிடம் அனுப்பி வைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டார். ஆனால், விசாரணைக் குழு பாதிக்கப்பட்ட மாணவிகளை அழைத்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கவனத்துக்குச் சென்ற நிலையில், உடனடியாக விசாரணை நடத்த விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து போலீசார் உடன் கல்லூரிக்கு விரைந்த ஆட்சியர் விசாரணை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. இளைஞர் கைது!
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கல்லூரி பேராசிரியர் மதன்குமாரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதையும் படிங்க: அரசு பள்ளியில் சத்துணவு ஊழியருக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் கைது!