POCSO Victim Protection order - பள்ளி மாணவிக்கு பாதுகாப்பு அளித்த சட்டம்!
இந்தியாவிலேயே முதல்முறையாக விழுப்புரத்தில் பள்ளி மாணவிக்கு பெண்களை கேலி செய்தால் தடை சட்டம்1998-ன் கீழ் பாதுகாப்பு அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
விழுப்புரத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை 19 வயதான ஆகாஷ் என்ற மாணவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவியையும் காதலிக்குமாறு ஆகாஷ் தொடர்ந்து வற்புறுத்தி மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.
வெளியில் சொல்ல அஞ்சிய மாணவி, ஆகாஷின் தொந்தரவு தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் இது குறித்து அவரது பெற்றோரிடம் வாய் திறந்து உள்ளார். இதைஅடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது மாணவிக்கு ஆகாஷ் தொந்தரவு அளித்தது நிரூபணம் ஆன நிலையில், போலீசார் ஆகாசை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஓராண்டுக்கு அதாவது மார்ச் 5ஆம் தேதி 2026 ஆம் ஆண்டு வரை பாதுகாப்பு அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: சிவராத்திரியில் சிக்கிக் கொண்ட மத்திய அமைச்சரின் மகள்..! தோழிகளுக்கு பாலியல் தொல்லை.. சிவசேனா குண்டர் கைது
இந்த வழக்கானது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாகும் என்றே சொல்லலாம். முன்னதாக பாதிக்கப்பட்ட மாணவிக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் போக்சோ வழக்கில் பிணையில் இருக்கும் ஆகாஷ் என்ற மாணவன் மீது திருத்தப்பட்ட தமிழ்நாடு பெண்களை கேலி செய்தல் தடை சட்டம் 1998-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் இந்திய தண்டனைச் சட்டம் 296(b), 35(3), 109 BNS 296(b), 78, 351(3), 109 BNS r/w 11 மற்றும் 12 போகோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் பிணையில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் கோட்டாட்சியர் முருகேசன், மார்ச் 5, 2026 ஆம் ஆண்டு வரை இந்த பாதுகாப்பு ஆணை செல்லுபடி ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் ஆகாஷ் சிறுமியை நேரடியாகவோ அல்லது வாய் மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ அல்லது சமூக வலைதளங்கள் மூலமாக ஓ அல்லது மூன்றாம் நபர்கள் மூலமாகவோ தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மீறி ஆகாஷ் மாணவியை தொந்தரவு செய்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று உத்தரவு திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: புகார் கொடுக்க வந்த பெண்ணிடம், பணம், மதுவுடன் உல்லாசத்துக்கும் அழைப்பு; தட்டித் தூக்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார்