×
 

மீண்டும் அமல்படுத்தப்பட்ட இ-பாஸ் முறை.. ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  வியாபாரிகள்..

நீலகிரியில் இ பாஸ் முறையை ரத்து செய்யக்கோரி அப்பகுதி வணிகர்கள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் சுற்றுலாத் தளங்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக வார இறுதி விடுமுறை நாட்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளுக்கு செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல இ-பாஸ் பதிவு செய்து பயணிக்கும் முறை கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டும் இ-பாஸ் நடைமுறை நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஊட்டி பகுதியில் சொந்த வாகனங்கள் அல்லது வாடகை வாகனங்களில் சுற்றுலா செல்வோர்களுக்கு வார இறுதியில் 8000 வாகனங்களுக்கும், வார நாட்களில் 6000 வாகனங்களுக்கும் அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஏப்ரலில் முற்றுகை போராட்டம்.. மின் ஊழியர் அமைப்பினர் அறிவிப்பு..

இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் 24 மணி நேர முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி வணிகர்கள் இன்று (ஏப்ரல் 02) ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேயிலை விவசாயிகளின் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை, ஊட்டி, குன்னூர் நகராட்சி மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், பிளாஸ்டிக் தடை சட்டத்திற்கு மாற்று ஏற்பாடு உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள்  அடைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தொடரும் விசைத்தறியாளர்களின் போராட்டம்.. ஜவுளி உற்பத்தியில் 250 கோடி loss!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share