அங்கன்வாடி மையத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை..
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அங்கன்வாடி மையத்தை சீரமைத்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மாத்தூரில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் 25 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.இந்த மையம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த மையம் பராமரிப்பு இன்றி கட்டிடம் முழுவதும் சேதமடைந்து அங்கங்கே சுவரில் விரிசல் ஏற்பட்டும்.சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்தும் காணப்படுகிறது.
இந்த நிலையில் அங்கன்வாடி மையத்தை புதுப்பித்துக் கொடுக்க பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இப்பகுதியைச் சேர்ந்த பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும் அங்கன்வாடி மையத்தில் மேற்கூரை பூச்சு மிகவும் சேதம் அடைந்து இருப்பதால் குழந்தைகள் மேல் விழக்கூடிய அபாயமும் உள்ளது.
இதையும் படிங்க: லாரி - கார் விபத்து.. 2 குழந்தைகள் உள்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
பெரும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த அங்கன்வாடி மையத்தை முழுமையாக பழுது பார்த்து சீரமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தான பத்திரத்தை ரத்து செய்ய வயதான பெற்றோருக்கு முழு உரிமை உண்டு... சென்னை ஐகோர்ட்..!