மாநில சுயாட்சி குறித்து திடீர் ஞானோதயம் ஏன்..? ஆர்.பி உதயகுமார் காட்டம்..!
மாநில சுயாட்சி குறித்து திடீர் ஞானோதயம் ஏன் என ஆர்.பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று உரை நிகழ்த்தினார். மாநில அரசுகளின் உரிமையை மத்திய அரசு பறிப்பதாகவும், மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுவதாகவும், மத்திய அரசு அதிகாரத்தை குறைப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் நீட் தேர்வு, தொகுதி மறு வரையறை, ஹிந்தி திணிப்பு உள்ளிட்டவைகள் குறித்து சட்டசபையில் முதலமைச்சர் பேசினார். குறிப்பாக மாநில சுயாட்சிக்கான முதல் குரல் தமிழ்நாட்டில் இருந்தே ஒலிப்பதாக முதலமைச்சர் கூறினார். பேரறிஞர் அண்ணா வழியில், கலைஞர் முன்வைத்த மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பதை செயல்படுத்தி மக்களாட்சி மலர வைக்க வேண்டும் என பேசினார். முதலமைச்சர் உரை நிகழ்த்திய போது அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படிங்க: மாநில உரிமைகளை மீட்க குழு.. சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் உரை
உறுப்பினர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி. உதயகுமார், சட்டப்பேரவையில் அதிமுகவினரை தொடர்ந்து புறக்கணிப்பதிலேயே சபாநாயகர் நேரத்தை செலவிடுகிறார் என குற்றம் சாட்டினார். நேரம் இல்லா நேரத்தில் பேசுவதற்கு விவாவதிப்பதற்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தும் பேசுவதற்கு அனுமதி அளிக்கவில்லை எனக் கூறினார். நேரு, அவரது மகன், சகோதரர் வீட்டில் நடந்த ஈடி ரெய்டு, பொன்முடியின் அநாகரிக பேச்சு குறித்து விவாதிக்க அனுமதி கேட்டதாக அவர் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளதாக, வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினர்கள் சார்பில் ஆர். பி உதயகுமார் பேசியுள்ளார். உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது குறித்து விமர்சித்த அவர், கோபத்தில் இருக்கும் தமிழக மக்களை மடைமாற்றம் செய்யவே மாநில சுயாட்சி குறித்து முதலமைச்சர் பேசியிருப்பதாகவும் மத்தியில் ஆளும் அரசுடன் கூட்டணியில் இருந்தபோது பேசி இருந்தால் மக்கள் நம்புவார்கள், இது முழுவதும் ஏமாற்று வேலை என உதயகுமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாநில உரிமைகளை மீட்க குழு.. சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் உரை