கோயில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்.. வாயை பிளக்க வைத்த பரிசுகள்..!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77-வது பிறந்தநாள் விழா மற்றும் உலகாண்டீஸ்வரி கோயில் கொடை விழாவை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் அருகே மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77-வது பிறந்தநாள் விழா மற்றும் உலகாண்டீஸ்வரி கோயில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பெரிய மாட்டு வண்டி போட்டியில் 11 மாட்டு வண்டிகளும், சின்ன மாட்டு வண்டி போட்டியில் 20 மாட்டு வண்டிகளும், குதிரை வண்டி எல்கை பந்தயத்தில் 20 வண்டிகளும் கலந்து கொண்டன. சின்ன மாட்டு வண்டி போட்டியை கடம்பூர் ஜமீன்தார் அருண் ராஜா தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அழிக்கும்’ ‘டிபிடிபி சட்டம்’: இந்தியா கூட்டணி குற்றச்சாட்டு..!
பெரிய மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை வைப்பார் மணிக்களா மாட்டு வண்டியும், இரண்டாவது பரிசை சீவலப்பேரி துர்காம்பிகை மாட்டு வண்டியும், மூன்றாவது பரிசை கம்பத்துப்பட்டி பால்பாண்டி மாட்டு வண்டியும், நான்காவது பரிசு ஓட்டப்பிடாரம் கணேசன் மாட்டு வண்டியும் வென்றன.
குதிரை வண்டி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 1 லட்ச ரூபாயும், 2ஆம் பரிசு லட்ச ரூபாயும், 75 ஆயிரமும், 3ஆம் பரிசாக 50 ஆயிரமும், 4ஆம் பரிசு 25 ஆயிரமும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாட்டு வண்டி, குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அனைத்து மாட்டு வண்டிகளுக்கும் 5000 வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: தலைவர் பதவி: அண்ணாமலை அவுட்... நயினாருக்கு ஆப்பு... விதியை மாற்றிய பாஜக..!