×
 

விபரீதத்தில் முடிந்த இன்ஸ்டா பழக்கம்..! சேலத்தில் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து..!

சேலத்தில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் மோகன பிரியன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் இன்ஸ்டாகிராம் மூலமாகவே பேசி வந்ததாக தெரிகிறது. ஆனால் நேரில் சந்தித்தபோது மோகன பிரியனை அந்த மாணவிக்கு பிடிக்காமல் போய் உள்ளது.

மேலும் தன்னைவிட ஒரு வயது சிறியவர் மற்றும் ஐடிஐ முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார் எனக் கூறி அந்த இளைஞரை மாணவி நிராகரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் மோகன பிரியன் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் மாணவியை கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார்.

இதையும் படிங்க: ஒரு வார பழக்கத்தில் மலர்ந்த காதல்.. 13 ஆண்டு திருமணத்திற்கு குட்பை.. இன்ஸ்டா காதலனுடன் ஓடிய மனைவி..!

இதனைத் தொடர்ந்து தனது கையை அறுத்துக் கொண்டு மோகன பிரியனும் தற்கொலைக்கு முயற்சித்து உள்ளார். தற்போது இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். Instagram பழக்கம் விபரீதத்தில் முடிந்த நிகழ்வு அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சேலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வைரலாகும் GHIBLI டிரெண்டிங்... வரிசை கட்டி நிற்கும் அரசியல் பிரபலங்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share