சாலையை கடக்க முயன்ற நபர்.. கார் மோதி தூக்கி வீசப்பட்டு பலி.. பகீர் சிசிடிவி காட்சி..!
கும்பகோணம் அருகே சாலையை கடக்க முயன்றபோது ஒருவர் சொகுசு கார் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் எலெக்ட்ரீஷனாக தொழில் செய்து வந்துள்ளார். இவர், கும்பகோணம், காரைக்கால் சாலையில் உள்ள முத்துபிள்ளை மண்டபம் பகுதியில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர், அதே பகுதியில் கும்பகோணம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் எதிரே உள்ள உணவகத்தில் உணவு வாங்கிக் கொண்டு சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியே வேகமாக சென்ற சொகுசு கார், சாலையின் கடக்க முயன்ற லட்சுமணன் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு, அதே காரின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
இதனையடுத்து சொகுசு காரை ஓட்டி வந்த நபர், அதே சாலையில் சற்று தூரம் தள்ளி காரை நிறுத்திவிட்டு தப்பியோடியதாக தெரிகிறது. முன்னதாக அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த லட்சுமணனை மீட்டு கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: அரசு பேருந்து - கார் மோதி விபத்து.. 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் லட்சுமணன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இவ்விபத்தை ஏற்படுத்திய காரின் உரிமையாளர் யார்? விபத்தின்போது காரை ஓட்டி வந்தது யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சி பதிவுகள் தற்போது வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆண்டியுள்ளது.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் அரங்கேறிய கோர விபத்து.. 1 வயது குழந்தை உட்பட 5 பேர் பலி..!