ரயில்களில் கூடுதல் சுமைகளுக்கு கட்டணம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!
ரயில்களில் கூடுதல் சுமை எடுத்துச் செல்ல இனி கட்டணம் வசூலிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பயணிகளின் போக்குவரத்தை எளிமையாக்குவதற்கும் பயணிகளின் சிரமத்தை குறைப்பதற்கும் ரயில் பயணம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தினந்தோறும் ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அந்த வகையில், தற்போது பயணிகள் எடுத்துச் செல்லும் லக்கேஜுகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், பத்து முதல் 15 கிலோ லக்கேஜ்களை கூடுதலாக கொண்டு செல்ல 1.5 மடங்கு கூடுதல் தொகை வசூலிக்கப்படும், படுக்கை வசதியை கொண்ட ரயிலில் பயணிப்போர் நபர் ஒன்றுக்கு 40 கிலோ லக்கேஜ்களை கொண்டு செல்லலாம். ஏசி 2 டயரில் 50 கிலோவும், ஏசி முதல் வகுப்பில் பயணிப்போர் 70 கிலோ நகை எடுத்து செல்லலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கண்ணாடி பாலத்திற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை.. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!
இதையும் படிங்க: தொடர் விடுமுறை எதிரொலி.. 3 லட்சத்துக்கும் அதிகமானோர் அரசு பேருந்துகளில் பயணம்.. போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு!