×
 

மக்களே உஷார்.. செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் வழித்தடத்தில் மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

பராமரிப்பு பணி காரணமாக தென் மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு பகுதியில் இருந்து தினந்தோறும் ஏராளமான ரயில் சேவைகள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி திருநெல்வேலி மதுரை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இருந்து தினந்தோறும் மக்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு மாநகரங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதில் பெரும்பாலான மக்கள் ரயில் போக்குவரத்தை தேர்வு செய்கின்றனர். இதனால் தெற்கு இருந்து ஏராளமான ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் அவ்வப்போது பராமரிப்பு பணிகளால் பல்வேறு ரயில் சேவைகள் தற்காலிகமாக மாற்றப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: புதுச்சேரி - திருப்பதி இடையே ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

இந்த நிலையில் மதுரை மற்றும் திருச்சி கோட்ட ரயில்வேவிற்கு உள்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள்  நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை முன்னிட்டு தென் மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி செங்கோட்டையிலிருந்து மதுரை வழியாக மயிலாடுதுறை வரை இயக்கப்படும் ரயிலானது நாளை விருதுநகரிலிருந்து மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் திருச்சி சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மறுமார்க்கமாக மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயில் ஆனது அன்றைய தினம் வழக்கமான பாதையில் மதுரை, திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஈரோடு - ஜோலார்பேட்டை ரயிலில் மாற்றம்.. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share