×
 

ஒரே நாளில் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு... இதன் சிறப்பம்சங்கள் என்ன? 

தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகங்களை சென்னையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் முகா ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மருந்தகங்களில் குறைந்த விலையில் ஜெனரிக் மற்றும் பிற மருந்து மாத்திரைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகங்களை சென்னையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் முகா ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மருந்தகங்களில் குறைந்த விலையில் ஜெனரிக் மற்றும் பிற மருந்து மாத்திரைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்துள்ளார். முதற்கட்டமாக இந்த ஆயிரம் மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தியாகராய நகர் பாண்டி பஜாரில் முதல்வர் மருந்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினே நேரடியாக திறந்து வைத்துள்ளார்.  இந்தியா முழுவதும் மக்கள் மருந்தகம் இருக்கிறது, தமிழ்நாட்டில் அம்மா மருந்தகம் இருக்கிறது. இதைக் காட்டிலும் முதல்வர் மருந்தகத்தினுடைய சிறப்பு என்ன என விரிவாக பார்க்கலாம்...

இதையும் படிங்க: 2026-ல் அதிமுக யாருடன் கூட்டணி? - ரகசியத்தை போட்டுடைத்த எடப்பாடி... உற்சாகத்தில் அதிமுக...! 

சிறப்பம்சங்கள் என்னென்ன? 

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகளை வாங்குவதால் நடுத்தர குடும்ப மக்களுக்கு சந்தை மதிப்பை விட 75 சதவீதம் வரை சேமிக்க முடியும். இந்த மருந்தகங்களில் ஜெனரிக் மருந்துகள் மட்டுமின்றி சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 762 வகையான மருந்துகளும் கிடைக்கும். அனைத்து மருந்துகளும் 25 சதவீதத்தில் இருந்து 75 சதவீதம் வரை குறைவான விலையில் கிடைக்கும். அதாவது வெளி சந்தைகளில் உள்ள மருந்தகங்களில் 70 ரூபாய்க்கும் கிடைக்கும் மருந்துகள், முதல்வர் மருந்தகத்தில் 11 ரூபாய் கிடைக்கும்.  நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கான மருந்துகளை குறைந்த விலையில் முதல்வர் மருந்தகங்களிலிருந்து வாங்கி பயன் பெற முடியும்.

மாவட்ட மருந்து கிடங்கிலிருந்து ஜெனிரிக் மருந்துகள், பிராண்டட் மருந்துகள், சர்ஜிக்கல், நியுட்ராசூட்டிகல்ஸ் மற்றும் இந்திய மருந்துகள் உள்ளிட்ட மருந்துகள் 1000 முதல்வர் மருந்தகங்களுக்கும் அனுப்பப்பட்டு பொது மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொழில்முனைவோரான இளம் தலைமுறையினர்: 

கடந்த வருஷம் 2024 சுதந்திர தின விழா உரையின் போது முதல்வர் தமிழகத்தில் குறைந்த விலையில் மருதகங்கள் திறக்கப்படும்னு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி டிஃபார்ம், பிபார்ம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் அப்படின்னும் அறிவிப்புகள் வெளியானது. அதன்படி விண்ணப்பம் செய்தவர்களின் தகுதியின் அடிப்படையில் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு,  அதன் அடிப்படையில தமிழகத்தில் ஆயிரம் மருந்தகங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. 

மருந்தகங்கள் பராமரித்தல் குறித்த பயிற்சி, மருந்து ஆய்வாளர்கள் மூலம் ஆவணங்கள் பராமரிப்பு பயிற்சி மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தும் மருந்தகங்களுக்கு நேரடியாக அழைத்து சென்று களப்பயிற்சி உட்பட மூன்று கட்டமாக பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

தொழில்முனைவோர் நடத்தும் அனைத்து முதல்வர் மருந்தகங்களுக்கும் 1.50 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜெனிரிக் மருந்துகளை மானியமாகவும், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் 1.50 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பிராண்டட் மருந்துகள், சர்ஜிக்கல், நியுட்ராசூட்டிகல்ஸ் மற்றும் இந்திய மருந்துகள் உட்பட இதர மருந்துகளையும் முதற்கட்டமாக அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெனிரிக் மருந்துகள் உட்பட அனைத்து வகையான மருந்துகளும் போதுமான அளவில் முதல்வர் மருந்தகங்களில் இருப்பு பராமரிக்கப்படுகிறது.

மருந்தாளுநர் மற்றும் தொழில்முனைவோர் சிறப்பாக பணியாற்றிட அவர்களுக்கு தேவைப்படும் கடனுதவி கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் அளிக்கவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் மருந்தகம் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில்முனைவோர் சார்பில் 500 மருந்தகங்களும், கூட்டுறவுத் துறை சார்பில் 500 மருந்தகங்களும், என மொத்தம் 1000 மருந்தங்கள் முதற்கட்டமாக செயல்படும். இதன்மூலம், B.Pharm/D.Pharm படித்த பட்டதாரிகள் 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? - அமைச்சர் ஏ.கே.செங்கோட்டையன் விளக்கம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share