2026-ல் அதிமுக யாருடன் கூட்டணி? - ரகசியத்தை போட்டுடைத்த எடப்பாடி... உற்சாகத்தில் அதிமுக...!
2026ல் அதிமுக மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2026ல் அதிமுக மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வேலூர் கோட்டையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, எங்கள் கூட்டணி கட்சியிலே அங்கம் வைக்கின்ற கட்சிகள் எல்லாம் ஒரே கொள்கையுடைய கட்சின்னு என ஸ்டாலின் கூறுகிறார், அப்படியானால் தனித்தனி கட்சியாக ஏன் இருக்க வேண்டும், எல்லாமே திமுகவோட சேர்த்திரலாம். அண்ணா திமுகவை பொறுத்தவரைக்கும் தேர்தல் வருகின்ற பொழுது கூட்டணி வைப்போம் கூட்டணி கொள்கை வேறு, கொள்கை வேறு. திமுக அப்படி அல்ல அதிகாரத்துக்கு வருவதற்கு கொள்கை விட்டுக்கொடுக்கின்ற ஒரே கட்சி திமுக கட்சி. கூட்டணி எதற்காக வைக்கிறோம் ஓட்டுகள் சிதறாமல் இருப்பதற்கு கூட்டணி வைக்கிறோம் கூட்டணி வைப்பது ஓட்டுக்கள் சிதறாமல் இருக்க அப்படி சிதறாமல் ஓட்டுக்களை வாங்கினால் தான் வெற்றி கிடைக்கும்.
வருகின்ற சட்டமன்ற 206 சட்டமன்றத் தேர்தலிலே அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலே மிகப்பெரிய கூட்டணியாக அமையும். ஏனென்று சொன்னால் நம்முடைய இங்கே மேடையிலே வீற்றிருக்கின்ற நிர்வாகிகள், இங்கே வருகை புரிந்திருக்கின்ற பாசரை சகோதர சகோதரிகள் வெளியிலே இருக்கின்ற பொதுமக்கள் எங்கே சென்றாலும் எப்படியாவது கூட்டணி அமையுங்கள் என்று சொல்கிறார்கள். எதற்காக நாம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக. உங்களுடைய அனைவருடைய கோரிக்கையும் ஏற்று 2026 ஆம் ஆண்டு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக தலைமையிலே வலிமையான வெற்றிக் கூட்டணி அமையும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுகவில் அடுத்த பிரளயத்துக்குக் காத்திருந்த சீனியர் நிர்வாகி… பதவி கொடுத்து ஆஃப் செய்த எடப்பாடியார்..!
முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகிறார் அண்ணா திமுக அறிக்கை எடப்பாடி வழனிசாமி உடைய அறிக்கை பாரத ஜனதா கட்சியின் அறிக்கையை ஒத்திருப்பதாக கூறிகிறார். பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் காலத்திலும் சரி, புரட்சித் தலைவர் அம்மா காலத்திலும் சரி, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் யாரை நம்பியும் இருந்தது கிடையாது. மக்களை நம்பி இருக்கின்றது. யாரை ஒட்டியும் அரசியல் செய்வது கிடையாது எனக்கூறினார்.
குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் துன்புறுத்தும் போது கதறு சத்தம் அப்பா அப்பா என்று கதறுகிறதே அந்த சத்தம் உங்களுக்கு கேட்கவில்லையா மூன்று வயது சிறுமியிலிருந்து பள்ளியிலே படிக்கின்ற சிறுமி வரை பாலியல் கொடுமைக்கு ஆளாகின்ற பொழுது கதறுகின்ற சத்தம் ஸ்டாலினுக்கு கேட்கவில்லையா?. அப்பா அப்பா என்று கதறுகிறதே அந்த கதறலுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள். ஜனவரி முதல் 14/2 2025 வரை சுமார் 107 போக்சோ வழக்குகள் தமிழகத்திலே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 56 பெண்கள் பாலியல் குற்றங்கள் இன்றைக்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது அப்படி என்றால் இரண்டே மாதத்தில் 18 வயதுக்கும் குறைவான இவ்வளவு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த கதறல் சத்தம்... அப்பா அப்பா என்று கதறுகின்ற சத்தம்... ஸ்டாலின் செவிக்கு எட்டவில்லையா? என சரமாரியாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் சொன்ன ஒற்றை வார்த்தை - ஆடிப்போன ஈபிஎஸ்...!