ஹோலி பண்டிகை எதிரொலி.. சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளிகள்..!
ஹோலி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் வழியாக வட மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
வடமாநிலங்களில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஹோலி பண்டிகையும் ஒன்று. முகத்தில் சாயங்களை பூசியும், வீடுகளில் விளக்கேற்றியும், இனிப்புகளை பரிமாறியும் சிறுவர் முதல் பெரியவர் வரை கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம்.
இந்த நிலையில் ஹோலி பண்டிகை நெருங்கும் நிலையில், தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக முனைப்பு காட்டியுள்ளனர். அந்த வகையில் திருப்பூரில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு பாதுகாப்பாக செல்லும் வகையில், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம் ஹல்ரத் நிஜாமுதீன் இடையான சிறப்பு ரயில் திருவனந்தபுரம் வடக்கிலிருந்து இன்று மற்றும் வருகின்ற 14ஆம் தேதி களில் பிற்பகல் 2. 15 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது இரவு 11.55 மணிக்கு மீண்டும் திருப்பூருக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மேட்டுப்பாளையம் உதகை சிறப்பு மலை ரயில்.. ரயில்வே நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!
தொடர்ந்து ஹஜ்ரத் நிஜாமுதீன் திருவனந்தபுரம் சிறப்பு ரயில் வருகின்ற 10ஆம் தேதி மற்றும் 17ஆம் தேதிகளில் அதிகாலை 4.10 மணிக்கு நிஜாமுதீனில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது திருப்பூருக்கு 12 மற்றும் 19ஆம் தேதி களில் காலை 4.38 மணிக்கு வந்து 4.40 மணிக்கு மீண்டும் புறப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதே போல் போத்தனூர் - பிரவுணி இடையவும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது வருகின்ற 15-ம் தேதி புறப்பட்டு திருப்பூருக்கு அதிகாலையில் சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 11 மற்றும் 18 தேதிகளில் பிரவுனியாவிலிருந்து புறப்பட்டு திருப்பூருக்கு 13 மற்றும் 20ஆம் தேதிகளில் அதிகாலையில் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: யூஸ் பண்ணிக்கோங்க மக்களே.. ஹோலி பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு..