திடீரென உயர்ந்த மேட்டூர் அணை உயர் மட்டம்.. காவிரி ஆற்றில் திருப்பி விடப்பட்ட தண்ணீர்..!
மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 500 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பருவ மழை காலம் முடிவடைந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சற்று குறைந்த வருகிறது. உன் தற்போது தமிழ்நாடு முழுவதும் குருவை சம்பா சாகுபடி அறுவடைக்கு தயாராக உள்ளதால் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 318 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், நேற்றைய தினம் அணைக்க வரும் நீரின் அளவு 167 கனியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 641 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 109.95 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 78.33 டி எம் சி ஆகவும் உள்ளது. குருவை சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூலை 28ஆம் தேதி அன்று தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு வரலாற்றிலேயே ஒரே ஆண்டில் மூன்று முறை அணை நிரம்பி வரலாற்று சாதனை நிகழ்த்தி சம்பவங்களும் உண்டு.
இதையும் படிங்க: டெல்லி முதல்வராக பர்வேஷ் வர்மாவுக்கு பதிலாக, ரேகா குப்தாவை பாஜக தேர்ந்தெடுக்க காரணம் என்ன?
அதன் மூலம் அதன் மூலம் சுற்று வட்டாரங்களான சேலம் கரூர் திருச்சி தஞ்சாவூர் திருவாரூர் நாகை மயிலாடுதுறை கடலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குருவை சம்பா சாகுபடிக்காக பாசன வசதி மேம்பட்டது. இதனால் சுமார் 17 லட்சம் ஏக்கர் விவசாயம் செழித்தது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. முன்னதாக அணை முழு கொள்ளளவை எட்டியதால் 16 கண் மதகுகள் மூலமாக 2500 வன அடி உவரி நீர் திறக்கப்பட்டு வந்து நீர் தற்போது நிறுத்தப்பட்டது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 500 கன அடி நீர் காவிரி ஆற்றல் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நாதகவில் சாதிய பாகுபாடு... கட்சியில் இருந்து விலகிய நிர்வாகி.. சீமான் மீது பகீர் குற்றச்சாட்டு..!