சுந்தரவள்ளியை நாடு கடத்துங்க.. தேசதுரோக வழக்கு போடுங்க.. ஆத்திரத்தை கொட்டித்தீர்த்த ராணுவ வீரர்..!
இந்திய ராணுவம் மீது அபாண்டமாக பழிபோட்ட சுந்தரவள்ளியை தேசதுரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று ராணுவ வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி சுற்றுலாப்பயணிகள் 27 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கொந்தளித்து வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள சில கட்சியினரும், ஆதரவாளர்களும் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருவது அவர்களை பாகிஸ்தான் பிரிவினைவதிகளை விட மோசமானவர்களாக உணர வைக்கிறது.
இந்நிலையில் திமுக ஆதரவாளரான சுந்தரவல்லி தனது எக்ஸ் தளப்பதிவில், ''ராணுவ வீரர்களை பாதுகாப்பின்றி ஆயுதங்களின்றி தெருவில் விட்ட மோடி. மேஜர் ஜெனரல் அவரின் கடுமையான கோபம் இது. மோடியை குற்றம் சாட்டினால் ராணுவத்தை குறை சொல்லுகிறோம் என்று வருகிற தற்குறிகளுக்கு சமர்ப்பணம்.
இதையும் படிங்க: காஷ்மீரில் தேடுதல் வேட்டை.. காட்டுக்குள் பதுங்கிய தீவிரவாதிகள்.. ஆக்ஷனில் இறங்கிய இந்திய ராணுவம்..!
மோடி கிட்ட போய் சொல்லு என்று சவால் விட்டுவிட்டு 26 பேரை கொன்று விட்டு சென்றிருக்கிறார்கள் பயங்கரவாதிகள். 25 இந்துக்களுக்கும் 1 இஸ்லாமியரின் உயிருக்கும் மோடி என்ன பதில் சொல்லுவார்? புலனாய்வு அமைப்புகள் தோற்றுப் போனதை மோடி ஒப்புக்கொள்ள வேண்டும். அமித்ஷாவும், மோடியும் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.
மாலேகான் அஜ்மீர் தர்கா அவுரங்காபாத் உட்பட 18 இடங்களில் செல்போன் வெடிகுண்டை வெடிக்கச் செய்து இஸ்லாமியர்கள் மீது பழி போட்ட ஆர்எஸ்எஸ் கும்பல் கொத்தாக சிக்கியது. ஆர்எஸ்எஸ் பயங்கரவாதத்தை கண்டுபிடித்த பயங்கரவாத ஒழிப்பு தலைவர் ஹேமந்த் கட்கரே தாஜ்ஹோட்டல் தாக்குதலில் ஆர்எஸ்எஸ் கொன்றது. சங்கிகள் தொட நடுங்கிகள் போல விடாம உலக நாடுகள் முழுவதும் இருந்து கால் பண்றீங்க. ரொம்ப பழைய டெக்னிக்டா.. விபச்சாரி, வேசினு நீங்க கட்டி விட்ட லட்சக் கணக்கான கதைகளுக்கே அஞ்சாத ஆளு நான்.
காஷ்மீரில் சுற்றுலா சென்றவர்களை இஸ்லாமியர்களா என ஆடையை கழற்றி பார்த்துவிட்டு சுட்டுக் கொன்றவர்கள் ராணுவ உடையில் துப்பாக்கியோடு சென்று சுட்டு இஸ்லாமியர்கள் மீது பழி போட்டு இருக்கிறார்கள். இதற்கு முன்பும் ராணுவத்தை வைத்து பாஜக இதை செய்திருக்கிறது'' என தொடர்ச்சியாக பதிவுகளை பகிர்ந்து வருகிறார் சுந்தரவள்ளி.
சுந்தரவள்ளியின் கருத்துக்கு எதிராக பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ராணுவ வீரர் ஒருவர் சுந்தரவள்ளியை வசைபாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பஹல்காமில் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு டிஆர்எப் என்ற அமைப்பு, நாங்கள் தான் இதை செய்தோம் என்று பொறுப்பேற்றுக் கொண்டார்கள். ஆனால் அபாண்டமாக ஒரு இந்திய ராணுவத்தின் மேல் பழி போட்ட ஒரு ஈனப்பிறவி தான் சுந்தரவள்ளி தான் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏன்?.. நீ அவ்வளவு பெரிய பெரிய ஆட்களை கையில் வைத்திருக்கிறாயா..? சுந்தரவள்ளி மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ஒரு ராணுவம் தான் இந்த தாக்குதலை நடத்தியது என்று சுந்தரவள்ளி பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்தும், இந்திய ராணுவத்தை தரக்குறைவாக விமர்சித்தும் பேசிய சுந்தரவள்ளி மீது தமிழக காவல்துறை ஏன் நடவடிக்கை இல்லை என கேள்வி எழுப்பிய அவர், சுந்தரவள்ளியை தேசதுரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என்றும் அவங்கள நாடு கடத்துங்க என்றும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ராணுவ உடையில் சுட்டுக் கொன்று இஸ்லாமியர்கள் மீது பழியா..? மத்திய அரசு மீது சுந்தர'வில்லி' பகீர்..!