“இத்தோட நிறுத்திக்கோங்க சீமான்... இல்லன்னா நாக்கை அறுத்திடுவோம்” - த.பெ.தி.கழகத்தினர் எச்சரிக்கை!
தந்தை பெரியாரைப் பற்றி தரம் தாழ்த்தி விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பட்டுக்கோட்டை டி.எஸ்.பியிடம் திராவிடர் கழகத்தினர் புகார் அளித்தனர்.
தந்தை பெரியாரைப் பற்றி தரம் தாழ்த்தி விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பட்டுக்கோட்டை டி.எஸ்.பியிடம் திராவிடர் கழகத்தினர் புகார் அளித்தனர்.
பெரியார் பற்றி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தரம் தாழ்த்தி விமர்சனம் செய்துள்ளார். இதற்காக தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத்தினர் வழக்கறிஞர்கள் திமுகவினர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையங்களில் புகார் மனு கொடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் திராவிடர் கழகத்தினர், தந்தை பெரியார் பற்றி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தரம் தாழ்த்தி விமர்சனம் செய்துள்ளார். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பட்டுக்கோட்டை போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகத்தில் இன்று மாலை புகார் கொடுத்தனர். அந்த புகாரில், இதுபோன்று ஒரு கேவலமான பேச்சினை பெரியார் எந்த ஒரு இடத்திலும் பேசியதில்லை. எழுதியதில்லை. சீமான் தனது அரசியல் சுயலாபத்திற்கு திட்டமிட்டு பெரியாரின் நன்மதிப்பை குலைக்கும் வகையில் எவ்வித ஆதாரமின்றி பொய்யான செய்தியை இட்டுக்கட்டி பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க: “ஆதாரங்கள நா தர்றேன்...” - சீமானுக்கு சப்போர்ட்டாக களமிறங்கிய அண்ணாமலை - அதிர்ந்து போன த.பெ.தி.க!
பெரியார் மீது சுமத்தப்படும் இந்த அவதூறு அவரது புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் மோசமான செயலாகும். அடிப்படை ஆதாரமற்ற, தரவுகளற்ற செய்தியை பொதுவெளியில் பெரியார் சொன்னதாக கூறி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைய வேண்டுமெனும் நோக்கில் சமூக பதட்டத்தையும், வன்முறையையும், கலவரத்தையும் தூண்டும் நோக்கில் திட்டமிட்டு தீய நோக்கத்தோடு பேசியுள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இவரது இந்த ஆதாரமற்ற பேச்சு நாம் தமிழர் கட்சியின் முகநூல் பக்கத்திலும், பல்வேறு தொலைக்காட்சிகளிலும், யூ டியூப் களிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதனால் பொது சமூகத்தில் ஒரு பதட்டமான கலவர சூழல் ஏற்பட்டுள்ள காரணத்தினால் அந்த காணொலிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து திராவிடர் கழகத்தினர் கூறுகையில், சீமான் இத்தோடு வாயை மூடிக்கொள்ள வேண்டும். இல்லையெல் நாக்கு அறுக்கப்படும். சீமான் உடனடியாக பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் அவர் தமிழ்நாட்டில் நடமாட முடியாது. என்று எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: "மானங்கெட்ட சீமானே வெளியே வா "- தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆவேசம்!