×
 

தேசிய கீதம் முதலில் இசைக்கவில்லை...உரையை வாசிக்காமல் வெளியேறிய ஆளுநர்...காரணம் இதுவா?

சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்க உள்ள நிலையில் சபைக்கு வந்த ஆளுநர் உரையை வாசிக்காமல் கிளம்பினார். அவர் வெளியேறியதற்கான காரணம் இதுதானா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக சட்டசபை இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்குகியது.

 கடந்த 2023 ஆண்டு ஆளுநர் சட்டசபையில் தமிழில் உரையாற்றி சில வார்த்தைகளை நீக்கியும் கூட்டியும் படித்ததில் சட்டசபையில் பிரச்சனை உருவானது. 

 ஆளுநர் உரையையே அவை குறிப்பில் இருந்து  நீக்கியும் அதற்கு எதிராக தீர்மானம் போட்டதையும் காணமுடிந்தது. அதற்குப் பிறகு பல்வேறு காலங்கட்டங்களில் ஆளுநருக்கு அரசுக்கும் இடையே மோதல் ஏற்படுவதும், பின்னர் இருவரும் கூடிக் குலாவுவதுமான நடைமுறை இருந்து வருகிறது.

இதையும் படிங்க: ஆளுநர் உரையை உதறித் தள்ளிவிட்டு... சட்டப்பேரவையை விட்டு வேக, வேகமாக வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

 சமீபத்தில் துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசுக்கும் ஆளுநருக்கு இடையே ஒரு விதமான மோதல் ஏற்பட்டு நீடித்து வருகிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடும் கேள்விக்குறியாகி உள்ள நிலையில் பெண்கள், சிறுமிகள் இளம்பெண்கள் கல்லூரி மாணவிகள் பாலியல் பிரச்சனை பூதாகரமாக தமிழகம் முழுவதும் இருந்து வரும் வேளையில், போதைப்பொருள் நடமாட்டம், 24 மணி நேரம் இயங்கும் டாஸ்மாக் பார்கள், மதுவினால் சீரழியும் இளைஞர்கள் என பல்வேறு பிரச்சனைகள் தமிழ்நாட்டில் எதிர்கட்சிகளால் குற்றம் சாட்டி வரும் நிலையில் சட்டமன்றம் கூடியது.

 இன்றைய சட்டமன்றத்தின் முதல் நாளில் ஆளுநர் அரசின் உரையை படிப்பார் பொதுவாக ஆளுநர் உரை என்பது அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையாகும். 

இதில் அரசின் சாதனைகள் குறித்து பெரும்பாலும் இருக்கும். அதில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணப்படுகிறது என்றும் இருக்கும். இதை ஆளுநர்கள் படித்து விட்டு செல்வது வழக்கம்.

ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி  ஏற்கனவே சில வார்த்தைகளை படிக்க மாட்டேன் என்று 2023 ஆம் ஆண்டு இதே போன்றதொரு ஆண்டின் முதல் சட்டமன்ற நாளில் பிரச்சனை எழுப்பி அது பூதாகரமாக வெடித்ததையும் பார்த்தோம்.

 முதலில் தேசிய கீதம் பிறகு தமிழ் தாய் வாழ்த்து இறுதியில் தேசிய கீதம் என்று ஆளுநர் வைத்த கோரிக்கையும் சட்டமன்றம் ஏற்கவில்லை. இந்நிலையில் ஆளுநர் உரையில் அரசின் திட்டங்கள் கொள்கைகள் செயல்பாடுகள் பற்றி இருக்கும் நிலையில் அதிமுகவினர் தமிழகத்தில் அண்ணா யுனிவர்சிட்டியில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை பற்றிய பிரச்சினையை பெரிதாக எழுப்பினார்கள். 

 இன்று காலை உரையை வாசிக்க வந்த ஆளுநர் சபைக்குள் வந்தவுடன் அவருக்கு எதிராக பண்ருட்டி வேல்முருகன் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்திற்கு ஆளுநர் பொறுபேற்க வேண்டும் என்று கோஷமிட்டார். அதன் பின்னர் அதிமுகவினர் யார் அந்த சார் என கோஷமிட்டனர்.

தமிழ்தாய் வாழ்த்து முடிந்ததும் அதிமுக உறுப்பினர்கள் கோஷமிட்டனர். ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் எல்லோரும் அமருங்கள் என தொடர்ந்து ஆளுநர் எல்லோரையும். அமரச்சொல்லியும் கேட்கவில்லை என்பதால் தேசிய கீதம் இசைக்கப்பட வில்லை என்று ஆளுநர் வெளியேறினார்.

ஆளுநர் வெளியேறியதற்கு இதுதான் காரணமா என்று கேட்டபோது ஆளுநர், அவையில் முதலில் தேசிய கீதம் இசைக்கவில்லை என்று வெளியேறியது காரணமாக இருக்க முடியாது, அவருக்கு அரசின் சாதனை உரையை அதிலும் குறிப்பாக மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள், சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது போன்ற வாசகங்களை வாசிக்க விரும்பாததால் வேறு காரணத்தை சொல்லி வெளியேறியிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
சட்ட பேரவை துவக்கத்தில் தேசிய கீதம் பாட ஆளுநர் வேண்டுகோள் விடுத்தது ஏற்கப்படாததால் ஆளுநர் வெளியேறியதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
 


 

இதையும் படிங்க: அரியணை நோக்கி...கனிமொழி பிறந்த நாளில் வைரலாகும் படங்கள்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share