புலிகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம் .. கால் தடங்கள், எச்சம் ..ஒன்னுவிடாம ஆராயும் வனத்துறையினர் ..!
கோவை மாவட்டத்தில் உள்ள ஏழு வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம்,காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம், கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி உள்ளிட்ட ஏழு வனச்சரகங்கள் உள்ளன..இந்த ஏழு வனச்சரகங்களில் நேற்று முதல் புலிகளின் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது.இந்த கணக்கெடுப்பு பணிகள் எட்டு நாட்கள் நடைபெற உள்ளன.கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.எட்டு நாட்கள் நடைபெறும் கணக்கெடுப்பின் முடிவில் சேகரிக்கப்படும் மாதிரிகளை கணக்கில் கொண்டு புலிகள் எண்ணிக்கை குறித்து அறிந்து கொள்ள முடியும்.மொத்தம் எட்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த கணக்கெடுப்பு பணியில் ஒரு பிரிவிற்கு ஒரு வனவர், ஒரு வனக்காப்பாளர், ஒரு வனக்காவலர் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் என ஐந்து பேர் கொண்ட குழுவினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் முதல் மூன்று நாட்கள் யானைகளின் சாணம், கால் தடங்கள், எச்சம் உள்ளிட்டவை கணக்கெடுக்கப்பட உள்ளன..காலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு கால்நடையாக நடந்து சென்று வனவிலங்குகளின் நடமாட்டம், அதன் கால் தடங்கள், எச்சம், தாவர வகைகள் உள்ளிட்டவை சேகரிக்கப்படும்..அடுத்ததாக 5 கிமீ தொலைவிற்கு சென்று வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்து ஆராயப்படும்.நான்காம் நாள் முதல் எட்டாம் நால்வரை நேர்கோட்டு பாதையில் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது..இதில் வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள், குளம், குட்டைகள் கண்காணிக்கப்பட உள்ளன..இந்த நீர் நிலைகளில் மறைவாக அமர்ந்து தாகம் தீர்க்க தண்ணீர் அருந்த வரும் வனவிலங்குகளை நேரடியாக கண்டு அதில் தாவர உண்ணிகள், ஊன் உண்ணிகள் என தனித்தனியாக கணக்கெடுக்கப்பட உள்ளது.
இதில் நேரடியாக களத்தில் தென்படும் மான்கள், யானைகள், காட்டெருமைகள்,சிறுத்தைகள், புலிகள் உள்ளிட்டவை கணக்கெடுக்கப்பட உள்ளன.. கணக்கெடுப்பின் முடிவில் அனைத்து மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு தோராயமாக ஒரு வனச்சரகத்திற்கு இத்தனை புலிகள் இருக்கலாம் என கணக்கெடுக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: காரணம் சொல்லி சொல்லி ..சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை