நகர்மன்ற கூட்டத்தில் சலசலப்பு - கடும் வாக்குவாதம்..!
திருச்செங்கோடு நகர மன்ற கூட்டத்தில் கடும் வாக்குவாதம் நகர மன்ற உறுப்பினர்களுக்கு தகவல் கொடுக்காமல் ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்படுவதாக நகர மன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு.
திருச்செங்கோடு நகர மன்ற கூட்டத்தில் கடும் வாக்குவாதம் நகர மன்ற உறுப்பினர்களுக்கு தகவல் கொடுக்காமல் ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்படுவதாக நகர மன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியின் சாதாரண கூட்டம் இன்று நகர மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தலைமை தாங்கினார் திருச்செங்கோடு நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தி கொடுத்த தமிழக முதல்வருக்கும் நகராட்சி துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இதனை அடுத்து நான்காவது வார்டு கவுன்சிலர் ரமேஷ் பேசும் போது நகராட்சியில் விடப்படும் ஒப்பந்தங்கள் நகர மன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிப்பதில்லை எனவும் திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆம்னி மற்றும் வேன் வாகன நிறுத்தும் இடத்திற்கு நகராட்சி ஒப்பந்த புள்ளி அறிவித்து அதனை ஏலம் விட்டுள்ளது. இதனால் ஆம்னி மற்றும் வேன் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே வேலையில்லாமல் பல்வேறு பிரச்சனையில் தவித்து வரும் வாகன ஓட்டிகளுக்கு இது சுமையாக இருக்கும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ட்விட்டரில் கருத்து மோதல்.. யோகிக்கு மு.க.ஸ்டாலின் பதில்.. விமர்சித்த அண்ணாமலை..!
அதற்கு பதிலளித்த நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, முறைப்படி நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு அரசு அறிவித்தபடி தான் ஏலம் விடப்பட்டுள்ளது என்றார். அதேபோன்று நகர மன்ற உறுப்பினர் அங்கமுத்து கூறும்போது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கூத்தப்பள்ளி பகுதியில் அமைக்கப்பட்டால் அதனை கூட்ட பள்ளி பொதுமக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த நகர மன்ற தலைவர் இன்னும் இடம் முடிவு செய்யப்படவில்லை. இடம் முடிவு செய்யப்பட்ட பின்பு தான் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்படும். அரசு என்ன சொல்கிறதோ அதனை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் என்று கூறினார்.
ஒண்ணாவது வார்டு உறுப்பினர் மாதேஸ்வரன் பேசும்போது எங்கள் பகுதியில் வெளியேற்றப்படும் கழிவு நீரை மற்ற பகுதியில் வரக்கூடாது என தடை செய்கிறார்கள். பொதுமக்கள் கவுன்சிலரான எங்களை கேள்வி கேட்கிறார்கள். இதற்கு சரியான தீர்வு எட்டாவிட்டால் அடுத்த கூட்டத்தில் நான் எனது பதவியை ராஜினாமாவை கொடுத்து விடுவேன் என்று தெரிவித்தார். வெளியேற்றப்படும் கழிவுநீர் இந்த பிரச்சனை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளதால் வருவாய் கோட்டாட்சியர் என்ன முடிவு செய்கிறாரோ, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இனி அடுத்த கூட்டத்திலிருந்து ஒவ்வொரு உறுப்பினர்கள் பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்படும் என நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தெரிவித்தார். இந்த கூட்டத்தில் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றதால் நகர மன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இந்த நகர மன்ற கூட்டத்தில் 112 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: இந்தியாவில் போட்ஸ் மூலம் முன்பதிவான 2,000 விசா நேர்காணல்கள் ரத்து.. அமெரிக்கத் தூதரகம் திடீர் உத்தரவு..!