தமிழக வனத்துறையில்புதிதாக கால்நடை மருத்துவ பணியிடங்கள்.. முதல்வர் ஒப்புதல்!
தமிழக வனத்துறையில் 23 கால்நடை மருத்துவ பணியிடங்களை புதிதாக உருவாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் பிரதான துறையாகவும், சுற்றுலா துறையில் கண்கவர் துறையாகவும் பயன்பாட்டில் இருந்து வருகிறது வனத்துறை. தனிப்பெரும் தன்மையை கொண்ட இந்த வனத்துறையானது, வளர்ச்சித் திட்டங்கள் இன்றி கிடப்பிலே கிடந்திருந்தது.
இந்த நிலையில் வனவிலங்குகளுக்கு சிறிய பாதுகாப்பு மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கும் வகையில் தமிழக வனத்துறையில் புதிதாக பணியிடங்களை உருவாக்க கோரிக்கைகள் வலுப்பெற்ற நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையை மேற்கொண்டார்.
தற்போது வனத்துறையில் புதிதாக 23 கால்நடை மருத்துவ பணியிடங்களை உருவாக்க திட்டமிட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வனவிலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு அவற்றுக்கான பராமரிப்பு மற்றும் மருத்துவ வசதிகளை வழங்குவதில் தமிழக அரசு முன்னோடியாக விளங்கி வருகிறது. இவ்வரசு வனவிலங்குகளின் பாதுகாப்புக்காக நவீன பாதுகாப்புத் திட்டங்களை உருவாக்க எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: இந்தி திணிப்பை எந்நாளும் எதிர்ப்போம்... மு.க.ஸ்டாலின் கடிதம்..!
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கோயம்புத்தூர் மாவட்டம் சாடி வயல் பகுதியில் புதிய யானைகள் பாதுகாப்பு மையம் ஒன்றினை அமைக்க உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பெத்திக்குட்டை பகுதியில் புதிதாக யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் ஆனைமலை புலிகள் பாதுகாப்பு மையத்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு மையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மீட்கப்பட்டு மற்றும் உடல் நலிவுற்ற யானைகள் திருச்சியில் உள்ள எம்.ஆர்.பாளையம் மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக 8 உதவி கால்நடை மருத்துவர் 6 கால்நடை உதவியாளர் மற்றும் 9 கால்நடை உதவியாளர் பணியிடங்கள் உட்பட மொத்தம் 23 கால்நடை கால்நடை மருத்துவ பணியிடங்களை உருவாக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: ஆங்கிலம் கற்றதால் தான் பெரிய நிறுவனங்களில் தமிழர்கள் உள்ளனர்..இந்தியை கற்பதால் என்ன பயன்?.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி..