பாலஸ்தீனியர்கள் மீள்குடியேற்றப்படுவார்கள்.. காசாவை கைப்பற்றுவோம்.. டிரம்ப் சூளுரை..!
அண்மையில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் காசாவை அமெரிக்கா கைப்பற்றவிருப்பதாக அறிவித்தது உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற டோனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் அந்நாட்டின் அதிபராக பதவியேற்றார். முன்னதாக, தான் அதிபராகப் பதவியேற்றால் உலகில் போர் நடக்க விடமாட்டேன் என தேர்தலின் போது அதிபர் டொனால்ட் டிரம்ப் வாக்குறுதி அளித்து இருந்தார்.
அதிபராகப் பதவியேற்ற பின்பு, டிரம்ப் பல முக்கிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து தற்போது காசாவை அமெரிக்கா கைப்பற்றி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் என செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் காசா நகரை நிர்வாகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே 2023 ஆம் ஆண்டு தொடங்கிய போர் கடந்த ஓராண்டு காலமாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் அமெரிக்கா இஸ்ரேல் கத்தார் உள்ளிட்ட நாடுகளின் வலியுறுத்தலுக்கு பின்னர் தீர்மானிக்கப்பட்டது.
இதையும் படிங்க: விருதுநகரில் மீண்டும் வெடி விபத்து.. சுக்கு நூறான ஆலை.. தொடரும் துயரம்..!
இதனைத் தொடர்ந்து காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகு அமெரிக்க அதிபர் டனால் ட்ரம்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். போர் நிறுத்தத்திற்கு பிறகான முதல் சந்திப்பு என்பதால் இந்த பேச்சு வார்த்தைகள் உலக அளவில் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன.
அதற்கு சிறிதும் ஏமாற்றமின்றி அமைந்தது ட்ரம்பின் அறிவிப்பு. பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் மீள் குடியேற்றப்படுவார்கள் என்றும் காசாமனையில் உள்ள பாலஸ்தீனியர்கள் எகிப்து மற்றும் ஜோடான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுவர் என்றும் தெரிவித்தார்.
மேலும் அம்மக்கள் காசாவில் வாழ முடியாது என்றும், போரால் சிதிலமடைந்த காசாவை அமெரிக்கா முழுமையாக கைப்பற்றும் என்றும் அறிவித்துள்ளார். அதன்படி அப்பகுதியில் அமெரிக்க ராணுவம் ஈடுபடுத்தப்பட்டு காசாவில் உள்ள குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்கள் அகற்றப்படும் என்று என்று அறிவித்தது உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தொடர்ந்து இது குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ, டிரம்பின் யோசனை வரலாற்றை மாற்றக்கூடிய ஒன்றாகும் என்றும் மத்திய கிழக்கின் புவிசார் அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த பேச்சு வார்த்தையின் போது நாட்டின் எதிர்கால அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் ஹமாஸ்-ன் ராணுவத்தை அளிப்பது, இஸ்ரேல் நாட்டின் பிணைகைதிகளாக இருப்பவர்களை பத்திரமாக மீட்பது உள்ளிட்ட பல்வேறு வலியுறுத்தல்களை முன்வைத்துள்ளார்.
இதையும் படிங்க: 'திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா..? மிரட்டி உருட்டுகிற வேலையெல்லாம் எங்களிடம் வேண்டாம்...' அண்ணாமலை பகீரங்க எச்சரிக்கை..!