கொளத்தூர் தொகுதியில் கல்விச்சோலை..! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பு..!
சென்னை கொளத்தூர் தொகுதியில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய முதல்வர் கல்விச்சோலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் ஏராளமான நலத்திட்ட உதவிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, சென்னை கொளத்தூர் தொகுதியில் 10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாலை நேர சிறப்பு வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட இந்த முதல்வர் கல்விச்சோலையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இதையும் படிங்க: இது மணிப்பூர் இல்ல.., தமிழ்நாடு..! பேரவையில் திமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்ட முதல்வர்..!
தொடர்ந்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை முதலமைச்சர் வழங்கினார். சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜமாலியா குடியிருப்பு பகுதியில் 130 பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வீடுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, கே.என். நேரு மேயர் பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் 135வது பிறந்தநாள்..! முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை..!