×
 

(மு)துகெலும்புள்ள (க)ளப்போராளி ஸ்டாலின்! விஜய் பேச்சுக்கு சத்யராஜ் பதிலடி…

மு.க.ஸ்டாலின் என்றால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் சொல்லலாம்...முதுகெலும்புள்ள களப்போராளி என்றும் சொல்லலாம் என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'சூரிய மகள் 2025' என்ற தலைப்பில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சதயராஜ், பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சமீபத்தில் பேசிய பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.

சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழு நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய விஜய், மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே, மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பேர மட்டும் வீராப்பா சொன்ன பத்தாது, செயலிலும் ஆட்சியிலும் காட்டணும் என கூறி இருந்தார். மத்திய அரசு பாசிஸம் செய்வதாக சொல்றீங்களே நீங்கள் செய்யுறதும் பாசிச ஆட்சிதானே! நான் என் நாட்டு மக்களை சந்திக்கக் கூடாது என எனக்கு தடை போட நீங்கள் யாரு சார் என பேசி இருந்தார் 

இதையும் படிங்க: தனித்து நிற்கதான் வீரம் தேவை..! விஜய் நிலைப்பாட்டை ஆதரிக்கும் சீமான்..!

மேலும், அணை போட்டு ஆற்றை தடுக்கலாம், ஆனால் காற்றை தடுக்க முடியாது. அதையும் மீறினால் அது சூறாவளியாகவோ சக்திமிக்க புயலாக மாறும் என்றும் இந்த மண் பிளவுவாத சக்திளுக்கு எதிரானது, அதனால், திமுக ஆட்சிக்கும், அரசியலுக்கும் தமிழ்நாடு பெண்கள் முடிவு கட்டப் போகிறார்கள் என்று பேசினார். அதுமட்டுமல்லாது, ஓட்டுக்காக காங்கிரஸ் உடன் கூட்டணி.,ஊழலுக்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது திமுக என குற்றம்சாட்டி இருந்தார்.

விஜயின் பேச்சுக்கு சூரிய சக்தி விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் சத்யராஜ் பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார். அப்போது, சூரிய மகள் கையில் புத்தகம் வைத்திருப்பது போன்ற சிலை உள்ளது என்றும் பெண் விடுதலை வேண்டுமென்றால் கையிலுள்ள கரண்டியினை பிடுங்கி விட்டு புத்தகத்தை கொடுங்கள் என்றவர் பெரியார் எனவும் கூறினார். 

மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்றால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் சொல்லலாம்., முதுகெலும்புள்ள களப்போராளி ஸ்டாலின் என்றும் சொல்லலாம் என தெரிவித்தார். அவரது முதுகெலும்பு வெறும் எழும்புகளால் ஆனது அல்ல. தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கையாலும், பேரறிஞர் அண்ணாவின் எதையும் தாங்கும் இதையத்தாலும், கலைஞரின் நெஞ்சுக்கு நீதியால் ஆனது எனவும் புகழ்ந்து கூறினார்.

அறநிலையத்துறை அமைச்சராக அல்ல அரணாக இருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு. அதனால் தான் ஆன்மீகத்தை சொல்லி ஆட்டையை போட நினைப்பவர்கள் இவரை பார்த்து பயப்படுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விஜய் ஒரு குழந்தை..! நாங்க பல ரேஸ்ல ஜெயிச்சவங்க.. அமைச்சர் சேகர்பாபு சரமாரி தாக்கு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share