×
 

வா தலைவா வா! உற்சாகம்.. ஆரவாரம்.. விஜயை வரவேற்க காலை முதலே குவிந்த தொண்டர்கள்..!

பூத் கமிட்டி கூட்டத்திற்காக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கோவைக்கு வருகை தர இருப்பதால் காலை முதலே விமான நிலையத்தில் தொண்டர்கள் குவிய தொடங்கினர்.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் பூத் கமிட்டி கூட்டம் கோவையில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. பூத் கமிட்டி கூட்டத்திற்காக கோவையில் இருந்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கோவைக்கு செல்கிறார். சென்னையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு விமானத்தின் மூலமாக கோவைக்கு விஜய் செல்ல உள்ளார்.

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கோவை மாவட்டம் சரவணம்பட்டி அடுத்துள்ள குரும்பம்பாளையம் என்ற பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், சென்னையில் இருந்து காலை 11 மணியளவில் கோவைக்கு வருகை தரவுள்ள விஜயை வரவேற்பதற்காக தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் விமான நிலைய வாயிலில் காலை முதலே குவியத் தொடங்கினர். 

இதையும் படிங்க: விஜய்க்கு எதிராக ஃபத்வா..! எந்த நிகழ்ச்சிக்கும் அவரை அழைக்காதீங்க.. ஜமாத் திட்டவட்டம்..!

கோவைக்கு வருகை தரும் விஜய் கார் மூலமாக நீலாம்பூர் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு செல்கிறார். அங்கிருந்து பிற்பகல் 3:30 மணிக்கு பூத் கமிட்டி நடைபெறும் இடத்திற்கு செல்ல உள்ளார்.

சுமார் மூன்று மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், முதல் கட்டமாக இன்றும் இரண்டாம் கட்டமாக நாளையும் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: தவெக கொடியின் யானை சின்னம்! விஜய் பதிலளிக்க உத்தரவு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share