தவெக கொடியின் யானை சின்னம்! விஜய் பதிலளிக்க உத்தரவு
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் அக்கட்சியின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.
தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் எனும் இளங்கோவன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது பகுஜன் சமாஜ் கட்சி தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றும் அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட யானை சின்னத்தை, அசாம் தவிர மற்ற மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தவெக யானை சின்னத்தை பயன்படுத்தி இருப்பது விதிகளுக்கு முரணானது என்றும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்து இருந்தார். எனவே யானை சின்னத்தைப் பயன்படுத்த தவெகவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.
இதையும் படிங்க: தவெக கொடியின் யானை சின்னம்! விஜய் பதிலளிக்க உத்தரவு
இதையடுத்து இந்த மனுவுக்கு வரும் ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதிக்குள், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: வயிற்றில் பாலை வார்த்துள்ளது வக்ஃபு சட்ட உத்தரவு..! தவெக தலைவர் விஜய் வரவேற்பு..!