வயிற்றில் பாலை வார்த்துள்ளது வக்ஃபு சட்ட உத்தரவு..! தவெக தலைவர் விஜய் வரவேற்பு..!
வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவிற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
வக்பு வாரிய திருத்த சட்டம் மசோதாவிற்கு எதிரான வழக்கில் சட்டப்படி புதிய உறுப்பினர் நியமனம் மேற்கொள்ளக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வரவேற்றுள்ளார் . இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய், வக்பு திருத்த சட்டத்தின் படி எந்த புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக்கூடாது என்றும் ஏற்கனவே பதியப்பட்ட வக்பு சொத்துக்கள் மீது எந்த புதிய நடவடிக்கையும் எடுக்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என கூறியுள்ளார்.
இஸ்லாமியர்களின் உரிமையான வக்பு வாரியம் தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டுவந்த புதிய சட்ட திருத்தத்தை எதிர்த்து தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்து உச்ச நீதிமன்றம் இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை பார்த்துள்ளது எனக் கூறினார். இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், எப்போதும்… தான் துணை நிற்பேன் என்றும் தமிழக வெற்றி கழகம் துணை நிற்கும் எனவும் தீர்க்கமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: த.வெ.க. பூத் கமிட்டி கருத்தரங்கம்..! விஜய் தேர்வு செய்த முதல் மண்டலம் இது தான்..!
பாசிச அணுகுமுறைக்கு எதிராக நாம் தொடங்கிய சட்ட போராட்டத்தில் நமக்கு துணையாக இருந்து இந்த உத்தரவை பெற்று தந்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி அவர்களுக்கும் அவருடைய வழக்கறிஞர் குழுவிற்கும் தமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விஜய்க்கு எதிராக ஃபத்வா..! எந்த நிகழ்ச்சிக்கும் அவரை அழைக்காதீங்க.. ஜமாத் திட்டவட்டம்..!