×
 

வரி ஏய்ப்பு புகார்... கட்டுக்கட்டாய் ஆவணங்கள்... சிபிஐ தூண்டிலில் வசமாக சிக்கிய வைகுண்டராஜன் அண்ணாச்சி

வரி ஏய்ப்பு புகாரை அடுத்து விவி மினரல்ஸ் வைகுண்டராஜனுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ திடீர் சோதனையில் இறங்கியுள்ளது.

\வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் திசையன்விளை வி.வி மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வைகுண்டராஜன் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனைமுக்கிய ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டனர்.

வி.வி மினரல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகம் மற்றும் வீடுகளில், இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் 7 வாகனங்களில் வந்து சோதனை நடத்தி வருகின்றனர். 

கடந்த ஆண்டுகளில் இந்தியாவில், அதிக தாதுமணல் ஏற்றுமதிசெய்யும் நிறுவனமாக வி.வி மினரல்ஸ் நிறுவனம் இருந்து வந்தது.இந்த நிறுவனம், நெல்லை மாவட்டம் திசையன்விளையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவந்தது. 

இதையும் படிங்க: ரூ.20 ஆயிரம் கோடி ஊழல்… சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் வீடுகளில் சிபிஐ சோதனை..!

இந்நிலையில், பலகோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் இதன் உரிமையாளர் வைகுண்டராஜன் என்பவருக்கு சொந்தமான நெல்லை மாவட்டம் திசையன்விளை கீரைகாரன்தட்டுவில் அமந்துள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களிலும் மேலும் உரிமையாளரின் சகோதருக்கு சொந்தமான நிறுவனத்திலும் இன்று அதிகாலை முதல் சிபிஐ அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தி வருகின்றனர். 

வருமான வரி செலுத்தாததே இந்தச் சோதனைக்கான காரணம் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், சோதனை தொடர்பான முழுமையான தகவல்கள் இன்னும் வெளியிடபடவில்லை  இதில் அவரது அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் அடங்கிய  சிபிஐ அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.
 

இதையும் படிங்க: ஒரே நாளில் இவ்வளவா?... மீண்டும் ஃபார்முக்கு வந்த கோயமுத்தூர்... துள்ளி குதிக்கும் கோவை வாசிகள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share